பன்னிரண்டு ராசிக்காரர்கள் தவிர்க்கவேண்டிய புனித தல யாத்திரை

18 Mar, 2024 | 06:20 PM
image

ன்றைய சூழலில் மக்களிடத்தில் ஆன்மீகம் தொடர்பான தன்னெழுச்சி அதிகரித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக ஜோதிடம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து, பெரும்பாலான மக்கள் ஜோதிடத்தை பற்றிய ஒரு தெளிவான புரிதலை புரிந்துகொண்டு வருகிறார்கள். இந்நிலையில் மக்களுக்கு அவர்கள் பிறந்த லக்னம், ராசி, நட்சத்திரம், கிரக இணைவு ஆகியவற்றை வலிமைப்படுத்துவதற்காக பிரத்யேக ஆலய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் என்று ஜோதிட நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி இருக்கிறார்கள்.

இந்நிலையில் நேர்நிலையான சாதகமான அம்சங்களை குறிப்பிடும் சோதிட நிபுணர்கள்... எதிர்மறையான விடயங்களையும் பட்டியலிடுகிறார்கள். அதாவது உங்களது ஜாதகத்தில் உங்களுக்கு கேடு விளைவிக்கும் எட்டாம் இடத்தை பற்றிய பார்வையை முழுமையாக புரிந்து கொண்டு,.. எட்டாமிடத்து சூட்சம தலமாக இருக்கும் ஆலயத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் எம்முடைய ஆன்மீக பெரியோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த பட்டியலை தற்போது கீழே காண்போம்.

மேஷம் - பழமுதிர்சோலை மற்றும் மருதமலை ஆகிய தலங்களுக்கு செவ்வாய்க்கிழமைகளில் செல்லவே கூடாது. அதையும் கடந்து குடும்ப உறுப்பினர்களின் அழுத்தம் காரணமாகவோ அல்லது மறைமுக நெருக்கடி காரணமாகவோ இந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டிய நிலை உருவானால்.. நீங்கள் அந்த ஆலயத்தில் பிரசாதமாக வழங்கும் திருநீற்றை வாங்காதீர்கள். அதையும் மீறி வாங்கினால் நெற்றியில் பூசிக்கொள்ளாதீர்கள். அதனுடன் ஒன்பது ரூபாய் சில்லறையாக மாற்றி அந்த ஆலயத்தில் உண்டியலில் காணிக்கையாக்கி விடுங்கள். இதனால் உங்களை சூழ திட்டமிட்டிருக்கும் விபத்து மற்றும் ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

ரிஷபம் - குருவாயூர் கோவிலுக்கு செல்லக்கூடாது. பதினாறு ரூபாயை காணிக்கையாக அளிக்கலாம்.

மிதுனம் - திருவெண்காடு செல்வதை தவிர்க்க வேண்டும். பதினேழு ரூபாயை காணிக்கையாக அளிக்கலாம்.

கடகம் - கன்னியாகுமரி அம்மன் ஆலயத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பத்து ரூபாயை காணிக்கையாக அளிக்கலாம்.

சிம்மம் - ஸ்ரீரங்கம் ஆலயத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும். ஆறு ரூபாயை காணிக்கையாக அளிக்கலாம். ஞாயிற்றுக்கிழமையில் செல்வதை முற்றாகவே தவிர்க்க வேண்டும்.

கன்னி - பழனி முருகன் ஆலயத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பதினேழு ரூபாயை காணிக்கையாக அளிக்கலாம். மலை மேல் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும். ஆனால் வேறு முருகன் ஆலயங்களுக்கு வேறு காரணங்களுக்காகவும் வேறு திகதிகளில் செல்லலாம்.

துலாம் - திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசிப்பதை தவிர்க்க வேண்டும். இருபது ரூபாயை காணிக்கையாக அளிக்கலாம்.

விருச்சிகம் - புதன்கிழமைகளில் திருவெண்காடு செல்வதை முற்றாக தவிர்க்க வேண்டும். பதினேழு ரூபாயை காணிக்கையாக அளிக்கலாம்.

தனுசு - திருப்பதி ஏழுமலை வெங்கடேச பெருமாளை தரிசிப்பதை தவிர்க்க வேண்டும். பதினாறு ரூபாயை காணிக்கையாக அளிக்கலாம்.

மகரம் - திருவண்ணாமலைக்கு சென்று அங்குள்ள சிவபெருமானை  தரிசிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

கும்பம் - கன்னியாகுமரிக்கு சென்று அங்குள்ள அம்மனை வழிபடுவதை தவிர்க்க வேண்டும். பத்தொன்பது ரூபாயை காணிக்கையாக அளிக்கலாம். அங்கேயே பிறந்தவர்கள் தவிர்க்க முடியாத சூழலில் அந்த ஆலயத்திற்கு சென்று விட்டீர்கள் என்றால்.., அங்குள்ள விநாயகப் பெருமானுக்கு இரண்டு நெய் தீபங்கள் ஏற்றி 11 முறை வலமாகவும், மூன்று முறை இடமாகவும் வலம் வந்து வணங்க வேண்டும்.

மீனம் - திருப்பதி ஏழுமலை வெங்கடேச பெருமாளை தரிசிப்பதை தவிர்க்க வேண்டும். பதினாறு ரூபாயை காணிக்கையாக அளிக்கலாம்.

மேஷம் முதல் மீன ராசி வரை உள்ளவர்கள் தவிர்க்க முடியாத சூழலில் சுப வைபவத்தில் பங்கு பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்.. அந்த தலத்திற்கு செல்லுங்கள். ஆனால் அந்த தலத்து இறைவனின் திருநீறு, குங்குமம், மஞ்சள், தீர்த்தம், பிரசாதம் ஆகியவற்றை பாவிக்க கூடாது. ஏனெனில் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தின் சூட்சம தலமாக அத்தகைய ஆலயங்கள் திகழ்கிறது. சித்தர்களின் அறிவுரையை மீறி இங்கு சென்று இறைவனை வணங்குபவர்களுக்கு... எட்டாம் பாவகத்திற்குரிய தண்டனைகள் அதாவது ஆயுஸ்தானம், விபத்து, வீண் வம்பு, வழக்கு போன்றவை ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிலதிபராக உயர்வதற்குரிய எளிய பரிகாரங்கள்...- 2

2024-05-24 17:46:47
news-image

தொழிலதிபர்களாக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள்..!?

2024-05-23 17:45:36
news-image

துர் மரணங்களால் ஏற்பட்ட தோஷங்கள் விலகி,...

2024-05-21 17:19:44
news-image

கௌரவம் - மரியாதை - கொடுத்த...

2024-05-18 18:10:29
news-image

தீராத கஷ்டங்களிலிருந்து நிவாரணம் தரும் எளிய...

2024-05-17 18:24:15
news-image

பதவி உயர்வு பெறுவதற்கான எளிய பரிகாரம்..!?

2024-05-16 17:36:46
news-image

உங்களுடைய ஜாதகத்தை வலிமைப்படுத்தும் பீஜ மந்திரம்..!

2024-05-15 17:33:35
news-image

திருமண தடையை அகற்றும் கோமுக தீர்த்த...

2024-05-14 17:44:12
news-image

வீடு கட்டும் பணியில் ஏற்படும் தாமதத்தை...

2024-05-13 17:22:24
news-image

கேது தோஷத்தை நீக்குவதற்கான எளிய பரிகாரம்..!

2024-05-11 17:13:12
news-image

காரிய சித்தியை அள்ளித்தரும் முருகன் வழிபாடு!

2024-05-11 13:08:41
news-image

அட்சய திருதியை அன்று மகாலட்சுமியை வணங்கி...

2024-05-09 16:39:36