அஜித் குமார் என்றாலே சாதனைதான் என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது. நட்சத்திர நடிகராக வலம் வந்தாலும் எளிமையான நட்சத்திரமாக ஜொலிக்கும் அஜித் குமார் நடிப்பில் 'குட் பேட் அக்லி' எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. வெளியான 24 மணி தியாலத்திற்குள் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை 27 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்வையிட்டிருப்பது புதிய சாதனையாக பதிவாகி இருக்கிறது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் ஜூன் மாதத்தில் தொடங்குகிறது என்றும் இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் அனைவரும் அறிந்ததே.
இதனிடையே 'காதல் தேசம்', 'காதலர் தினம்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கதிர் மற்றும் அவரது ஐக்கிய அமீரக தயாரிப்பாள நண்பர் ஆகிய இருவரும் அஜித் குமாரை டுபாயில் சந்தித்துள்ளனர் என்பதும், அதன் போது இயக்குநர் கதிர் அஜித்குமாரிடம் மூன்று கதைகளை சொல்லி இருக்கிறார் என்பதும், அதில் ஒரு கதையை தெரிவு செய்து நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM