பிரிட்டனின் வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த சட்ட பிரேரணையாக பார்க்கப்படும் பிரெக்ஸிட் சட்டவரைபை, பிரித்தானிய மகாராணி அனுமதித்ததனால், அது சட்டமாக மாற்றம்பெறவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, பிரிட்டன் வெளியேறும் பிரேரணைக்கு பிரித்தானிய மகாராணி 2ஆம் எலிசபத் அங்கீகாரம் வழங்கியுள்ளார். இதனுடாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயிற்கு அடுத்தபடியான சட்ட நகர்வை மேற்கொள்ளுவதற்கான அதிகாரம் கிடைக்கப்பட்டுள்ளதாக ஆண்ட்டி ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 

மேலும் கடந்தாண்டு இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது 52 சதவீதமானவர்கள் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விளக்குவதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். குறித்த தீர்மானத்துக்கு எதிராக இருந்த முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் பதவி விலகினார். புதிய பிரதமராக தெரசா மே தெரிவாகினார்.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, விலகுவதற்கு அனுமதி பெறுவதற்கான சட்ட வரைபு பிரிட்டன் பாராளுமன்றத்தில் விவாதத்திற்குட்பட்டு, ஏற்படுத்தப்பட்ட வாக்களிப்பில், சட்ட திருத்தத்துக்கு எதிராக 335 உறுப்பினர்களும், ஆதரவாக 287 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். இருப்பினும் மக்களின் கருத்துப்படி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் பிரேரணைக்கு பிரிட்டன் பாராளுமன்றம் இம்மாதம் 14 ஆம் திகதி அனுமதியளித்திருந்தது.

குறித்த அங்கீகாரம் பெற்ற பிரெக்ஸிட் பிரேரணை பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் அனுமதியை பெற அனுப்பட்ட நிலையில் அவர் அனுமதி அளித்துள்ளார். 

அத்தோடு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துடனான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் ஒன்றிய நாடுகளுக்கு வசிக்கும் மக்களின் இரட்டை குடியுரிமையின் நிலைப்பாடு தொடர்பாக ஐரோப்பிய பாராளுமன்ற தலைவருடன், பிரிட்டன் பிரதமர் தெரேசா மே ஆலோசனை செய்து முடிவுகளை அறிவிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.