சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும் செயற்கை நுண்ணறிவையும் பயன்படுத்துவது குறித்து தீவிர கவனம் செலுத்தவேண்டும் - வவுனியா மாநாட்டில் கல்விமான்கள் வேண்டுகோள்

Published By: Rajeeban

18 Mar, 2024 | 11:46 AM
image

இலங்கையிலும் சர்வதேச அளவிலும் சமதானத்தை கட்டியெழுப்புவதில்  டிஜிட்டல் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை பயன்படுத்துவது குறித்து ஆராயவேண்டியதன் அவசியத்தை  உள்நாட்டையும் உலக நாடுகளையும் சேர்ந்த கல்விமான்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆசிய பசுபிக்சமாதான ஆராய்ச்சி சங்கத்தின்2024ம் ஆண்டுக்கான சர்வதேச மாநாடு -  சமாதானம் மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு- வவுனியா பல்கலைகழகத்தில்  மார்ச் 7ம் திகதி முதல் 10 ம் திகதி வரை இடம்பெற்றவேளை அதில் கலந்துகொண்டு உரையாற்றிய கல்விமான்கள் டிஜிட்டல் தொழில்நுட்பம்; செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி நிரந்தரசமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான வழிவகைகளை ஆராயவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இந்த மாநாட்டில் 100க்கும் அதிகமான வெளிநாட்டு  மற்றும் உள்நாட்டு பேராசிரியர்கள் கலந்துகொண்டு  ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

அமெரிக்கா ஜேர்மனி ஜப்பான்  இந்தியா நியுசிலாந்து  இந்தேனேசியா உட்பட 20க்கும் அதிகமான  நாடுகளில் இருந்து பேராசிரியர்கள் வளவாளர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டினை வவுனியா பல்கலைகழகம்  ஆசிய பசுபி;க் சமாதான ஆராய்ச்சி சங்கம்  ஆகியவை பிரித்தானியாவின் கேட் நிலையத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

ஆசிய பசுபிக் ஆராய்ச்சி சங்கம்  1964 ம் ஆண்டு சமாதான கற்கைகளின் தந்தை என அழைக்கப்படும்  நோர்வேயின் பேராசிரியர் ஜொஹான் கல்துங்;கினால் ஆரம்பிக்கப்பட்டது.

இது சர்வதேச சமாதான ஆராய்ச்சி சங்கத்தின் கிளையாகும்

இந்த சங்கத்தின்  மாநாடு முதல்முறையாக இலங்கையில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பல்கலைகழக  துணைவேந்தர்  பேராசிரியர் ரி மங்களேஸ்வரன் ஆசிய பசுபிக் சமாதான ஆராய்;;ச்சி சங்கத்தின்  செயலாளர் நாயகங்கள் பேராசிரியர் ராஜிப்; டிமலசினோ ( நேபாளம் )  நியுசிலாந்தை சேர்ந்த  பேராசிரியர்  கெலிரி மைக்ரோவா  பிரித்தானியாவின்  கேட் நிலையத்தின் பிரதம நிறைவேற்று  பணிப்பாளர் கலாநிதி சேந்தன் செல்வராஜா ஆகியோர் இந்த மாநாட்டின் கூட்டு தலைவர்களாக செயற்பட்டனர்.

வவுனியா பல்கலைகழகத்தின்  நல்லி;ணக்க  நிலையத்தின்பணி;ப்பாளரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான மதிவதனி சசிதரன் பணியாற்றினார்.

.

நிரந்தர சமாதானம் மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கும் செயற்கை நுண்ணறிவையும் காத்திரமான முறையில் பயன்படுத்தலாம் என  தெரிவித்த வவுனியா பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் ரி மங்களேஸ்வரன் இதில் பல்கலைகழங்களின் பங்களிப்பின்  அவசியத்தை வலியுறுத்தினார்.

மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது.

தற்கால சமூகத்தினை வடிவமைப்பதில்   மற்றும்  செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பினை நாங்கள் அங்கீகரிக்கின்ற இந்த தருணத்தில் இந்த மாநாடு தற்போதையை தேவைகள் குறித்து ஆராய்வதற்கு  மிகவும் பொருத்தமானது தகுந்த தருணத்தில் இந்த மாநாடு இடம்பெறுகின்றது.

உலகநாடுகள்  அமைதி சமாதானம்   போன்ற விடயங்களில் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ள தருணத்தில் இந்த மாநாட்டில் ஆராயப்படும் விடயங்கள் சரியான தருணத்தில் மிகவும் பொருத்தமானவை

டிஜிட்டல் தொழில்நுட்பம் என்பது  ஆட்சிமுறை  பொருளாதாரம்  சமூக செயற்பாடுகள்  போன்றவற்றில்  குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக காணப்படுகின்றது.

தனிநபர்களினதும் சமூகத்தினதும் வாழ்க்கையை மாற்றியமைக்ககூடியதாக காணப்படுகின்றது.

சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான  ஆற்றலை டிஜி;ட்டல் தொழில்நுட்பம் கொண்டுள்ளது அதேவேளை இதன் காரணமாக தனிமனிஅந்தரங்கத்திற்கு ஆபத்து- தரவு பாதுகாப்பு  பாதுகாப்பு ஆபத்து  போன்ற புதிய சவால்களும் எழுந்துள்ளன.

டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பில் ஆராய்ச்சிகள் தொடர்கின்ற இன்றைய சூழ்நிலையில் நன்மைகள் மற்றும்  சவால்கள் பற்றிய கருத்துக்களும் வெளியாகிவருகின்றன.

 இவற்றை நாங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என ஆராய்வது, சிந்திப்பது அவசியம்.

டிஜிட்டல் சார்ந்த விடயங்களில் பொதுமக்கள் பெருமளவு பங்குபெற முடியாத நிலை காணப்படுவதற்கு டிஜிட்டல் கல்வியறிவு போதியளவு இன்மையே காரணமாக உள்ளது 

டிஜிட்டல் தொழி;ல்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு அனைவருக்கும் சமமான சந்தர்ப்பங்களை வழங்கவேண்டும் பல்கலைகழங்களுக்கு இதில் பெரும் கடப்பாடு உள்ளது என அவர் தெரிவித்தார்.

நியுசிலாந்தை சேர்ந்த  பேராசிரியர்  கெலிரி மைக்ரோவா - 

நாங்கள் அனைவரும் சமாதானமான சூழலில் வாழ விரும்புகின்றோம் அர்த்தபூர்வமான வாழ்க்கையை வாழவிரும்புகின்றோம்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் என்பது யாரும் நினைத்து பார்க்க முடியாத மாற்றங்களை  ஏற்படுத்துகின்றது.

இது எங்களின் மாவேரி  சமூகத்திற்கு பெரும் விடுதலையை பெற்றுதந்துள்ளது.

சுதேசிய மக்கள்  ஒடுக்கப்பட்டவர்கள்  பழங்குடியினருக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

சேந்தன் செல்வராஜா(பிரித்தானியாவின்  கேட் நிலையத்தின் பிரதம நிறைவேற்று  பணிப்பாளர்)

சமாதானம் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை வழங்ககூடிய திறன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு உள்ளது குறிப்பிட்ட  செயற்கை நுண்ணறிவின்  மூன்று கூறுகளான டொமைன் நொலேஜ் எனப்படும் கள அறிவு  டேட்டா ஜெனரேசன் எனப்படும் தரவு உருவாக்கம் மெசின் லேர்னிங்;  ஆகியவை   ஜனநாயகத்தை  ஊக்குவித்தல்  மனித உரிமைகள்  நல்லாட்சி  சமாதானம் ஆகியவற்றை பாதுகாப்பதுமற்றும்   ஊக்குவிப்பதற்கான பொறிமுறைகள்  மற்றும் புரட்சிகர மாற்றங்களை உருவாக்கும் பாரிய திறன்களை கொண்டுள்ளன.

சுகாதாரம் நிதி பாதுகாப்பு  சந்தைப்படுத்தல் பொழுதுபோக்கு போன்ற துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

எனினும்  ஜனநாயகம் மனித உரிமை நல்லாட்சி சமாதானம் ஆகியவற்றிற்கும் செயற்கைநுண்ணறிவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்த ஆய்வுகள் இன்னமும் ஆரம்பகட்டத்திலேயே உள்ளன 

டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி   ஜனநாயகம் மனித உரிமைகள்  நல்லாட்சி  சமாதானம் போன்றவற்றை எவ்வாறு வளப்படுத்தலாம் என்பது குறித்து ஆராயும் முதல் சர்வதேச மாநாடு இதுவாகயிருக்கலாம்.

ஏப்பிரா மாநாட்டை  இலங்கையில் ஏற்பாடு செய்வது  அவசியமானது  மேலும் உரிய தருணத்தில் இந்த மாநாடு  முன்னெடுக்கப்படுகின்றது.

இ;ந்த மாநாடு  இலங்கையின்  சமாதானத்திற்கு வழிவகுக்ககூடிய ஆராய்ச்சிகள்  மற்றும் திட்டங்களில்  வெளிநாட்டு உள்நாட்டு  ஆராய்ச்சியாளர்கள் ஈடுபடுவதற்கும்  வழிவகுக்கும்.

மேலும் இலங்கையில்  இந்த சர்வதேச மாநாடு இடம்பெறுவது  இலங்கையில்  ஜனநாயகம்  நல்லாட்சி  மனித உரிமைகள் போன்றவற்றை  அர்த்தமுள்ள விதத்தி;ல் பலனனிக்ககூடிய விதத்தில் தக்கவைப்பதில்  செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை நோக்கி கவனத்தை ஈர்க்கும்.

ரஜரட்ட பல்கலைகழக துணைவேந்தர் ஜிஏஎஸ் கினிகதர

-

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசாங்கங்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவது குறித்து கருத்துரைத்த  ரஜரட்ட பல்கலைகழக  துணைவேந்தர் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி மனிதஉரிமை விடயங்களை கண்காணிக்கலாம் 

நாங்கள் எங்கள்அடுத்த தலைமுறைக்கு இந்த தொழில்நுட்பம்  குறித்த அறிவை வழங்கவேண்டும் பல்கலைகழகங்கள் இந்த விடயத்தில்  முன்னுதாரணமாக செயற்படவேண்டும் முன்னோடிகளாக மாறவேண்டும்.

மூன்று நாட்கள் இடம்பெற்ற இந்த மாநாட்டில் சர்வதேச பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டு டிஜிட்டல் மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பிலான தங்களின் அனுபவங்களை முன்வைத்தனர்.

கிழக்கு பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் வி கனகசிங்கம் 

சமதானத்தை கட்டியெழுப்புவதற்கு டிஜிட்டல் - தொடர்பான முதலாவது மாநாடு இது.

மூன்று தசாப்தகால யுத்தத்தின் பின்னரும்  இலங்கை சமாதானத்தை நோக்கிய பாதையில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.

யுத்;தத்தினை நேரடியாக எதிர்கொள்ளாத அதில் ஈடுபடாத இளைஞர்களே தற்போது அதன் தாக்கத்தை அனுபவிக்கின்றனர்.

இது கவலையளிக்கின்றது.

அவர்கள் பங்கெடுக்காவிட்டாலும்  அவர்கள் அதன் விளைவை அனுபவிக்கவேண்டிய நிலைகாணப்படுகின்றது.

தேர்தல்கள் வருவதால் அரசியல்வாதிகள் பதற்றமான வார்த்தைகளை பயன்படுத்தி  சமூகத்தினை பதற்றமான நிலையில் வைத்திருப்பதற்கு முயல்கின்றனர்.

இளைஞர்கள் மத்தியில் உண்மையான அமைதியை எவ்வாறு ஏற்படுத்துவது என்பது குறித்து ஆராயவேண்டும்.

பல்கலைகழகங்களில் பாடத்திட்டங்களில்  சமாதானத்தை ஏற்படுத்துவது குறித்த விடயங்களை உருவாக்கவேண்டும், எந்த பல்கலைகழகமும் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடவில்லை.

நல்லிணக்க நிலையம்  என்பதனை உருவாக்குகின்ற விடயத்தில் கிழக்கு பல்கலைகழகம் வவுனியா பல்கலைகழகத்தினை பி;ன்பற்றலாம்.

; இனங்களின் சமூகங்களின்  அபிலாசைகளை பூர்த்தி செய்வதே  நிரந்தர சமாதானத்திற்கு அவசியமான விடயம் என தெரிவித்தார். பேராதனை பல்கலைகழக பேராசிரியர் சன்டி நந்தன  விஜயசிங்க  

இவர் இலங்கை பல்கலைகழகமானியங்கள் ஆணைக்குழுவின்   சமூக நல்லிணக்க நிலையங்களின் நிலையியல் குழுவின் தலைவராகவும் செயற்படுகின்றார்.

அவர் தனது உரையில் -

இனரீதியான பதற்றம் தீவிரமடையும்போது அதன் விளைவுகள் மோசமாக காணப்படலாம்  ஜனநாயகத்தை அது தடுக்கலாம் தவிர்க்கலாம்.

பிரிந்துசெல்லுதல் என்பது ஒரு தீர்வுஎன பல கல்விமான்கள் தெரிவிக்கின்றனர்  ஆனால் பல குழுக்கள் கொண்ட ஒரு சமூகத்தில் பிரிவினை என்பது சாத்தியமற்ற விடயம் அனைத்து சமூகத்தினரும்அதுவே ஒரேயொரு தீர்வு என  ஏற்றுக்கொண்டால் மாத்திரமே அது சாத்தியமாகும்.

எனினும் மோதல்கள் ஒருபோது சமூகங்களிற்கு இடையிலான ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகளை அழித்துவிடுவதில்லை

பல உலக நாடுகளை போல இலங்கை இனமத வன்முறைகளை அனுபவித்துள்ளது இலங்கைக்கு அது புதிய விடயமல்ல .30 வருட ஆயுதமோதல் இனமோதல் மற்றும் சமீபத்தைய பயங்கரவாத தாக்குதல் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ளது மக்கள் அதன் மோசமான விளைவுகளை எதிர்கொண்டுள்ளனர்.

இலங்கை இன்னமும் இனவன்முறை ஆபத்துக்களை கொண்டுள்ளது.

இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு சமாதான கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியிருந்தது.

மக்கள் மத்தியில் அமைதியை சமாதானத்தை ஏற்படுத்துவதில் இளைஞர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கலாம்

இதன்காரணமாகவே நாங்கள் இளைஞர்கள் குறித்து கவனம் செலுத்துகின்றோம்.

சமூக ஊடகங்களை மாற்றத்திற்கான முகவர்களாக நாங்கள் பார்க்கின்றோம் இதன் காரணமாக நல்லிணக்கத்தின் அனைத்து அம்சங்களிலும் சமூக ஊடகங்களைபயன்படுத்த தீர்மானித்துள்ளோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் சிறப்பம்சங்கள்

2024-09-10 15:40:23
news-image

உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப்...

2024-08-29 19:56:50
news-image

இந்தியாவின் நடமாடும் மருத்துவமனைகள் ; ஆக்ராவில்...

2024-05-22 20:10:13
news-image

“பிக்சல் ப்ளூம்” கொழும்பு தாமரை கோபுரத்தில்...

2024-05-11 09:37:56
news-image

கடந்த வருடம் இலங்கையில் கணினிகளில் ஒரு...

2024-05-10 12:24:26
news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57