வடக்கில் வதைமுகாம் இருந்ததாக கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது 

Published By: Priyatharshan

08 Jan, 2016 | 09:08 AM
image

வடக்கில் வதை­முகாம் இருப்­ப­தாக கூறப்­படும் கட்­டுக்­க­தை­களை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. வெறு­மனே முட்­கம்­பி­களை வைத்து பாது­காப்பு முகாமை வதை­மு­கா­மாக கணிக்க முடி­யாது என இராணுவ ஊடகப் பேச்­சாளர்பிரி­கே­டியர் ஜெயநாத் ஜெய­வீர தெரி­வித்தார்.

ஐ.எஸ். பயங்­க­ர­வா­திகள் தொடர்பில் அதி தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறிவிக்கும் வாராந்த செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போது வலி­காமம் வடக்கில் புதி­தாக வதை­முகாம் ஒன்று இரு­ப­தாக செய்­திகள் வெளி­வந்­துள்­ளமை மற்றும் ஐ.எஸ்.பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

வடக்கில் யுத்த கால­கட்­டத்தில் இரா­ணுவ வதை முகாம்கள் இயங்­கி­ய­தாக குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. கடந்த காலத்தில் அவ்­வா­றான ஒரு­சில குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டன. ஆனால் நிரூபிக்­கக்­கூ­டிய வகையில் எவ்­வித ஆதா­ரங்­களும் இருக்­க­வில்லை. அதேபோல் இப்­போதும் வலி­காமம் வடக்கில் அவ்­வா­றான ஒரு வதை முகாம் இருந்­த­தா­கவும் அந்த முகாமில் முட்­கம்பி மூல­மாக அறைகள் நிர்­மா­ணிக்­கப்­பட்­ட­தா­கவும் கூறு­கின்­றனர். ஆனால் இந்த முகாம் வதை முகாம் அல்ல. வலி­காமம் வடக்கில் இருந்த முகாம் பாது­காப்பு முகாம் மட்­டு­மே­யாகும்.

அதேபோல் முட்­கம்பி அமைத்து முகாமை பாது­காத்­தது புலி­களின் தாக்­கு­தலில் இருந்து தப்­பி­க்க­வே­யாகும். ஆகவே வெறும் முட்­கம்­பி­களை வைத்து பாது­காப்பு முகாமை வதை முகா­மாக சித்­த­ரிப்­பதை எம்மால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. வடக்கில் இருக்கும் ஏனைய முகாம்கள் தொடர்­பிலும் ஆதராம் இல்­லாது முன்­வைக்­கப்­படும் குற்­ற­சாட்­டு­களை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

நாட்டில் புதி­தாக ஐ.எஸ். பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைகள் பர­வி­வ­ரு­கின்ற ஒரு அச்­சு­றுத்தல் காணப்­ப­டு­கின்­றது. ஐ.எஸ். பயங்­க­ர­வா­திகள் இந்த நாட்டில் செயற்­ப­டு­வதாக வெ ளி வரும் தக­வ­லுக்கு அமைய புல­னாய்வு பிரி­வினர் தீவி­ர­மாக விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். தேசிய பாது­காப்பு விட­யத்தில் நாம் மிகவும் அவ­தா­னத்­துடன் செயற்­பட்டு வரு­கின்றோம். முப்­ப­டை­களும், காவல் துறையும் மிகவும் அவ­தா­ன­மாக இந்த அச்­சு­றுத்­தலை கையாண்டு வரு­கின்­றது.

எனினும் ஐ.எஸ். பயங்­க­ர­வா­திகள் தொடர்பில் புல­னாய்வு தக­வல்­களை ஊட­கங்கள் வெளிப்­ப­டுத்­து­வதை தவிர்த்­துக்­கொள்ள வேண்டும்.காரணம் என்­ன­வெனில் நாம் மேற்­கொள்ளும் இந்த விசா­ர­ணைகள் மிகவும் இர­க­சி­ய­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அதேபோல் இப்­போது இவ்­வா­றான தக­வல்­களை வெ ளியிட்டார்.

அவர்­களின் செயற்­பா­டு­களை அவ­தானிக்க கடி­ன­மா­கி­விடும். அதேபோல் சர்­வ­தேச நாடு­க­ளுடன் இவர்கள் செயற்­படும் தொடர்புகளும் துண்­டிக்­கப்­படும். அவ்­வாறு இருக்­கையில் எம்மால் சரி­யாக இந்த செயற்­பா­டு­களை அவ­தா­னித்து கண்­ட­றி­ய­மு­டி­யாது போய்விடும்.

எவ்வாறு இருப்பினும் இப்போது நிலவும் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் எவ்வித அச்சமும் சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. பாதுகாப்பு படையினருக்கு கிடைக்கப்பெறும் புலனாய்வு தகவல்கள் மிகவும் அவதானமாக ஆராயப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02