இலங்கையின் டிஜிட்டல் துறையில் முன்னணி வகிக்கும் செலான் வங்கி அதன் டிஜிட்டல் வாடிக்கையாளர் சேவைகளை விஸ்தரிக்கும் நோக்கில் Seylan Messenger Bot - என்னும் Chat Bot மூலம் Facebook Messenger இல் வாடிக்கையாளர் வினாக்களுக்கு விடையளிக்கும் பொறிமுறையினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கையின் டிஜிட்டல் துறையில் முன்னணி வகிக்கும் செலான் வங்கி அதன் டிஜிட்டல் வாடிக்கையாளர் சேவைகளை விஸ்தரிக்கும் நோக்கில் Seylan Messenger Bot - என்னும் Chat Bot மூலம் Facebook Messenger இல் வாடிக்கையாளர் வினாக்களுக்கு விடையளிக்கும் பொறிமுறையினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இப்புதிய சேவையானது, வாடிக்கையாளர்களின் அடிப்படை வங்கிச் சேவை மற்றும் நிதிசார் வினாக்களுக்கு உடனடி பதில்களை வழங்கும் முகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வங்கியின் Facebook பக்கத்திலிலுள்ள fans எண்ணிக்கை 500,000ஆக அதிகரித்துள்ளதுடன் 2016ஆம் ஆண்டில் டிஜிட்டல் வட்டி மற்றும் Facebook வங்கிச்சேவையை வழங்கும் Seylan Seylfie என்னும் இளைஞர் கணக்கை அறிமுகப்படுத்தியது.
வளர்ந்து வரும் சமூக வலைத்தள மற்றும் குறுந்தகவல் app களான WhatsApp மற்றும் Facebook Messenger ஆகியன வாடிக்கையாளர்களால் அதிகமாக பயன்படுத்தப்படுவதுடன் இப்புதிய Chat Bot Messenger மூலம் உலகெங்கிலுமுள்ள வங்கியின் 1 பில்லியன் பயனர்களுடன் நெருங்கிய தொடர்பை பேண வங்கி உத்தேசித்துள்ளது.
“செலான் வங்கியில் நாம் தொடர்ந்து வாடிக்கையாளர் ஆதரவு சேவைகளை முன்னேற்றி எமது தடத்தை விஸ்தரித்து வருகிறோம். இந்த அண்மைய அறிமுகம் நாம் அண்மையில் அறிமுகப்படுத்திய பல டிஜிட்டல் புத்தாக்கங்களில் ஒன்றாகும். வங்கி மற்றும நிதியியல் நிறுவனம் என்னும் வகையில் நாம் புதிய தொழிநுட்பங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வாடிக்கையாளர் ஈடுபாட்டை அதிகரிக்க வேண்டும். பல சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் நிலையில் வாடிக்கையாளர்களும் தங்களது தேவைக்கும் தெரிவிற்கும் ஏற்ப சேவையை வழங்கும் வங்கியை நாடுகின்றனர். வாடிக்கையாளர்களால் தினமும் பயன்படுத்தப்படும் தளங்களிற்கு விஸ்தரிப்பதன் மூலம் அவர்களுக்கு சௌகரியத ;தை நாம் வழங்குகிறோம்.” என்று பணிப்பாளர் பிரதம நிறைவேற்று அதிகாரியான கபில ஆரியரட்ன தெரிவித்தார்.
Seylan Messenger Bot ஐ தவிர செலான் வங்கி WhatsApp மற்றும் Facebook Messenger மூலம் சமூக வலைத்தள வாடிக்கையாளர் ஆதரவு சேவையை வாடிக்கையாளர்கள் பயணிக்கும் போதே தமது வங்கித்தேவைகளை நிறைவேற்றும் முகமாக அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கி இவ்வருடம் தமது 29ஆவது ஆண்டுப் பூர்த்தியை கொண்டாடும் தருணத்தில் நாட்டின் முன்னணி வங்கியாக தன்னை நிலைநிறுத்தும் முகமாக தனது சேவைகளை விஸ்தரித்து வருகின்றது.
“செலான் வங்கிக்கு அதன் டிஜிட்டல் வாடிக்கையாளர் சேவை ஊடாக தினமும் நூற்றுக்கு மேற்பட்ட விசாரணைகள் கிடைக்கின்றன. Seylan Messenger Bot இன் அறிமுகம் மூலம் எளிய கேள்விகளுக்கு பதில் சொல்ல எடுக்கும் நேரத்தை குறைத்து வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர்கள் சிக்கலான வினாக்களை அணுகலாம். உதாரணத்திற்கு வாடிக்கையாளர் ஒருவர் நடைமுறை கணக்கை ஆரம்பிப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினால் Messenger Bot தானாகவே வாடிக்கையாளரை குறித்த பக்கத்திற்கு நெறிப்படுத்தும். இதன் மூலம் வாடிக்கையாளர், சேவை மையத்தை தொலைபேசி மூலமோ அல்லது இணையத்தில் தேடும் தேவை ஏற்படாது.
எமது உள்ளக குழுக்கள் எமது பங்குதாரருடன் இணைந்து வாடிக்கையாளரின் கேள்விகளுக்கு உடனடி பதில்களை வழங்க தயாராகவுள்ள அதே வேளை எமது chat bot அதே சேவையை 24/7, 365 நாட்கள் வழங்க தயாராகவுள்ளது.” என செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் பிரத்தியேக வங்கியியல் பிரதிப் பொது முகாமையாளர் திலான் விஜயசேகர தெரிவித்தார்.
உலகளாவிய ரீதியில் மிகச் சில வங்கிகளே சமூக வலைத்தளங்களை சிறப்பான வாடிக்கையாளர் சேவை வழங்க பயன்படுத்தியுள்ளது. இவ்வரிசையில் செலான் வங்கியும் இணைந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறது. செலான் வங்கி நெகிழ்வான, நட்புறவான சேவையை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளருடனான உறவை வலுப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வங்கி 1.5 மில்லியனிற்கும் மேற்பட்ட விசுவாசமிகு வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
தனித்துவமான சேவைகளை வழங்குவதால் வங்கியின் SME, சிறுவர் சேமிப்பு, பிரத்தியேக, நிறுவன மற்றும் கிரெடிட் கார்ட் பிரிவுகள் வளர்ந்து வருகின்றன. மேலும் நாடெங்கும் தனது இருப்பை விஸ்தரிப்பதில் வங்கி அக்கறை கொண்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM