அயல் வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு சென்ற பெண் கீழே விழுந்து மரணம் - வட்டுக்கோட்டை தொல்புரத்தில் சம்பவம்!

Published By: Vishnu

18 Mar, 2024 | 02:57 AM
image

திங்கட்கிழமை (17) மாலை, அயல் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு படலைக்கு வெளியே வந்த குடும்பப் பெண்ணொருவர் கீழே மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவரை தூக்கிக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்றவேளை வீட்டின் வாசலில் அவர் உயிரிழந்துள்ளார். 

வட்டுக்கோட்டை - தொல்புரம் கிழக்கு, சுழிபுரம், சிவபூமியடி பகுதியைச் சேர்ந்த இராசேந்திரம் செல்வநிதி (வயது 49) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் அவரது அயல்வீட்டுக்காரருடன் பேசுவதில்லை. இந்நிலையில் அவரது வீட்டிலிருந்து சுமார் 30 மீட்டர்கள் தூரத்தில் உள்ள அயல்வீட்டுக்கு சென்று தண்ணீர் தருமாறு கேட்டு வாங்கி குடித்துவிட்டு தனது வீட்டுக்கு செல்வதற்கு வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் வீதியில் மயங்கி விழுந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை தூக்கி அவரது வீட்டுக்கு கொண்டு செல்லும்போது குறித்த பெண் உயிரிழந்துள்ளார். இது குறித்து உயிரிழந்த பெண்ணின் கணவன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, கணவர் அவரை தாக்குவதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் தாயார் வழமையாக பாவிக்கும் மாத்திரைகளை விழுங்கிவிட்டு அயல்வீட்டுக்கு சென்றதாக அவரது மகள் தெரிவிக்கின்றார்.

இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்ற விபரங்கள் வெளியாகவில்லை. வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலமானது உடற்கூற்று பரிசேதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேச எல்லைகளைக் கடந்து பயணிக்கின்ற சவால்களுக்கு...

2025-02-12 19:41:07
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16
news-image

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு...

2025-02-12 18:24:06
news-image

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைவராக முன்னாள்...

2025-02-12 18:13:43
news-image

தையிட்டி விகாரை விடயத்தில் சட்ட ஆட்சி...

2025-02-12 17:19:27
news-image

சம்மாந்துறையில் வீடொன்றினுள் புகுந்து 2 பவுண்...

2025-02-12 16:49:09
news-image

மட்டக்களப்பில் வயலுக்குள் புகுந்து விளைபயிர்களை நாசப்படுத்திய...

2025-02-12 16:34:58
news-image

எதிர்பார்ப்பின் மேடை நிகழ்வு “டவர் நாடக...

2025-02-12 18:12:00
news-image

புறக்கோட்டை களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3...

2025-02-12 16:21:35
news-image

முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது

2025-02-12 15:55:39