இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் விடுதலை செய்துள்ளனர்.

குறித்த 8 இந்திய மீனவர்களும் காங்கேசன்துறைக்கு வடக்கே அமைந்துள்ள சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடலோரக் காவற்படையினரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர்.

இந்த நடவடிக்கையில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான “சீ.ஜீ.47” கடற்படைக் கப்பலும் இந்திய கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான “அப்ஹீக்” என்ற கடற்படைக் கப்பலும் பயன்படுத்தப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 77 இந்திய மீனவர்களும் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 இலங்கை மீனவர்களும் கடந்த 14 ஆம் திகதி பரஸ்பரம் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.