அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழ விற்பனை அமோகம்!

17 Mar, 2024 | 11:26 AM
image

அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதி பிரதான வீதியோரங்களில் வெள்ளரிப்பழம் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. மக்களும் ஆர்வமாக வெள்ளரிப்பழங்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.

குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, காரைதீவு, சம்மாந்துறை, அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களில் வெள்ளரிப்பழம் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதை காண முடிகிறது.

கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியோரங்களில் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழங்களை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள உடல் உஷ்ணத்தை தணிக்கும் பொருட்டு வெள்ளரிப்பழங்கள் சாப்பிடுவதில் மக்கள் அதிக நாட்டம் கொண்டு வருகின்றனர்.

மேலும், அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழத்துக்கு சிறந்த கிராக்கி ஏற்பட்டுள்ளதுடன், இப்பழங்கள் சுமார் 300 - 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வகைப் பழங்களின் விளைச்சல் பெரும்பாலும் வெப்பமான காலங்களிலேயே அதிகமாக இடம்பெறுகிறது. 

குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில்  அதிகமாக செய்கையிடப்பட்டு, அறுவடை செய்யப்பட்டு, ஏனைய ஊர்களுக்கு வெள்ளரிப்பழங்கள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன.

மேலும், கல்முனை- அக்கரைப்பற்று  பிரதான வீதியில் இளநீர், தோடை, குளிர்பானம் செய்யும் விற்பனை நிலையங்கள் அதிகமாக   காணப்படுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தல்...

2025-02-18 11:34:40
news-image

உப்புவெளியில் இரண்டு கஜ முத்துக்களுடன் இளைஞன்...

2025-02-18 11:15:58
news-image

கட்டுகஸ்தோட்டையில் சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக...

2025-02-18 11:10:46
news-image

வெலிபென்ன பகுதியில் ஹெராயின் , துப்பாக்கி,...

2025-02-18 11:00:46
news-image

தமிழ்நாட்டுமீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்துப்பாக்கிச்சூடு: மத்திய...

2025-02-18 10:59:10
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கல்விக்கு...

2025-02-18 10:58:57
news-image

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நால்வர் கட்டுநாயக்கவில் கைது

2025-02-18 11:27:31
news-image

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச்...

2025-02-18 10:28:24
news-image

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை...

2025-02-18 10:47:04
news-image

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமற்ற...

2025-02-18 09:46:11
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி...

2025-02-18 09:49:06
news-image

முல்லைத்தீவு பகுதியில் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர்...

2025-02-18 09:09:26