மலேஷியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் உட்பட 158 பேர் கைது

17 Mar, 2024 | 10:52 AM
image

மலேஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் உட்பட 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேஷிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்திளம் தெரிவித்துள்ளது. 

மலேஷிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால்  இந்த குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது . 

வெளிநாடுகளைச் சேர்ந்த 358 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவர்களில் 158 பேருக்கு மலேசியாவில் தங்குவதற்கு உரிய விசா இல்லை என்றும் கூறப்படுகிறது. 

இந்த சுற்றிவளைப்பில் 158 பேரில் 83 ஆண்கள், 54 பெண்கள், 8 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதில் மூன்று குழந்தைகளும் அடங்குவதாக   மலேஷிய குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கைது செய்யப்பட்டவர்களில், இலங்கையர்களைத் தவிர, இந்தோனேஷியா, நேபாளம், மியன்மார், பங்களாதேஷ், சீனா, பாகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர் . 

இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் நாட்டுக்கு வந்து குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சிலர் மலேஷியாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவது மலேஷிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.   

முறையான அனுமதியின்றி வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தங்குமிடம் வழங்கியமை குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் மலேசிய மலேசிய குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026 வரவு - செலவுத் திட்டம்...

2025-11-10 15:25:24
news-image

விவசாயிகள் தொடர்பில் எடுத்துள்ள தீர்மானத்தை அரசாங்கம்...

2025-11-10 15:23:51
news-image

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவை முக்கிய...

2025-11-10 17:43:31
news-image

ஐ.தே.க.வை கட்டியெழுப்ப 6 மாத கால...

2025-11-10 15:12:05
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் முன்மொழிவுகளுக்காக...

2025-11-10 16:53:48
news-image

இலங்கை - சவூதி இடையிலான இருதரப்பு...

2025-11-10 16:37:24
news-image

முல்லைத்தீவில் கரையோர மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி

2025-11-10 18:47:36
news-image

கணக்காய்வாளர் நாயகத்தின் 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த...

2025-11-10 18:52:51
news-image

அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்காக ஆசிரியர்கள் டிசம்பரில்...

2025-11-10 18:22:43
news-image

கரடியனாறு பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி...

2025-11-10 18:12:42
news-image

ஐ.தே.கவின் அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதி பொதுச்...

2025-11-10 18:01:43
news-image

ஏறாவூரில் வாள்களுடன் பெண் கைது

2025-11-10 17:07:20