கோழி முட்டைகள் மீது ஓவியம்

Published By: Digital Desk 3

16 Mar, 2024 | 04:12 PM
image

இந்தியாவில் தமிழகத்தைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவரான சரண் சந்திரேஷ் (12) என்ற சிறுவன் ஒரு மணி நேரத்தில் 19 தலைவர்களின் உருவங்களை கோழி முட்டைகள் மீது வரைந்து சாதனை படைத்துள்ளார்.

இந்த சிறுவன் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள அதிவீரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவராவார்.

இவர் 7ம் வகுப்பில் கல்வி கற்கிறார்.

சரண் சந்திரேஷுக்கு ஓவியங்கள் வரைவதில் அதீத ஈடுபாடு உண்டு. பள்ளிகள் அளவிலும், மாவட்ட அளவிலும் நடைபெற்ற ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை குவித்துள்ளார்.

இந்நிலையில், இந்திய தேசத்தின் விடுதலைக்காக போராடிய தலைவர்களின் உருவங்களை கோழி முட்டை மீது வரையும் சாதனை நிகழ்ச்சியில் மாணவர் சரண் சந்திரேஷ் கலந்து கொண்டார்.

அவருக்கு கொடுக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில், தேசத்தந்தை மகாத்மா காந்தி, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, சுதந்திர போராட்ட வீரர்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வ.உ.சிதம்பரம் பிள்ளை, மகாகவி பாரதியார், காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், பகத்சிங், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உள்ளிட்ட 19 தலைவர்களின் உருவங்களை வரைந்து அசத்தியுள்ளார்.

மாணவர் சரண் சந்திரேஷின் இந்த சாதனையை பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டினர். பள்ளி நிர்வாகிகள், அவருக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right