சுற்றுலா சென்றிருந்த 200 பேரில், 70 பேர் எரிமலைத் தீவிலிருந்து கேபல் காரின் ஊடாக கீழே வரமுனைந்த போது, இடையில் சுமார் 250 அடி உயரத்தில் மாட்டிக்கொண்ட சம்பவம் ஸ்பெயினில் இடம்பெற்றுள்ளது.

ஸ்பெயினில் சுமார் 3700 மீற்றர் உயரமுடைய எரிமலைத்தீவில், கேபில் காரின் ஊடாக பயணம் செய்ய வந்தவர்களில் 70 பேர் சென்ற கேபில் கார்கள், இடையில் 250 அடி உயரத்தில் நின்றதால், பயணிகளை மீட்பதற்காக அந்நாட்டின் விமான மீட்புக்குழு, தீயனைப்பு படையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்டோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

மேலும் குறித்த சம்பவத்தால் மலையின் உச்சியிலிருந்த அநேகமானோர், இரவு முழுவதும் மலையிலேயே தங்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நீண்டநேரப் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ள பயணிகளில் அநேகமானோர் மனோரீதியான பிரச்சினைக்குட்பட்டுள்ளனர்.

அத்தோடு மீட்கப்பட்டுள்ள சுற்றுலாப்பயணிகளுக்கு விசேட மனோதத்துவ சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதோடு, 70 பேரையும் பத்திரமாக மீட்பதற்காக சுமார் 100 இற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பயண்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.