கடத்தப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்காக கப்பலில் ஏறிச் சண்டையிட்ட சோமாலிய கடற்படையினரை இரண்டு மணித்தியாலத்திற்குள் கப்பலில் இருந்து இறங்குமாறு சோமாலிய கடற்கொள்ளையர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இத்தகவலை அக் கப்பலில் கடத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள கப்டன் நிக்ளஸ் வீரகேசரி இணையத்தளத்திற்கு  வழங்கினார்.

குறித்த கப்பலில் 70 தொடக்கம் 90 வரையிலான கொள்ளையர்கள் காணப்படுவதாகவும் கப்டன் நிக்ளஸ் குறிப்பிட்டார்.

இதேவேளை சோமாலிய கடற்படையினர் மேற்கொள்ளும் சண்டையினை உடனடியாக நிறுத்த இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்து அதன் ஊடாக சோமாலிய அரசாங்கத்துக்கு அறிவிக்குமாறும் கப்படன் நிக்ளஸ் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை கடத்தப்பட்ட எட்டு பேரும் எவ்வித ஆபத்தும் இன்றி இருப்பதாகவும் உறுதிப்படுத்தினார்.

மேலும் இத்தகவல் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டு வெளிவிவகார அமைச்சு ஊடாக சோமாலிய அரசாங்கத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.