மல்வத்துஹிரிபிட்டிய கஹடான ஸ்ரீ ஞானராம விகாரையின் தேரரை சுட்டுக்கொன்று அவரிடமிருந்து கொள்ளையிட்டுச் சென்ற நீல மாணிக்கக் கல் போலியானது என பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்த தேரரிடம் இருந்த நீல மாணிக்கக் கல்லை கொள்ளையிடுவதற்காகவே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேரரை கொன்ற கும்பலால் கொள்ளையிட்டுச் செல்லப்பட்ட நீல மாணிக்கக் கல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அந்த நீல மாணிக்கக் கல் போலியானது என விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
துபாயில் வசிக்கும் அத்துருகிரிய லெடா மற்றும் பத்தரமுல்லை பன்ட்டி ஆகியோரின் தலைமையில் 4 சந்தேக நபர்கள் கொண்ட கும்பலினால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கடந்த 11 ஆம் திகதி அன்று பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM