எமது வீட்டுக்கு தலைவனாக விளங்கும் பெரியப்பாவை  தயவுசெய்து உரியவர்கள் நடவடிக்கை எடுத்து விடுதலை செய்ய உதவுமாறு சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தி வைக்கப்பட்டுள்ள திமிழரான கப்பலின் கப்டன் எஸ்.ஏ.ரி. நிக்ளஸின் பெறாமகள் தானியா ஜேசுதாசன் மன்றாட்டமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்­கி­ய­ அ­ர­பு­ இ­ராச்­சி­யத்­துக்­கு­ச் சொந்­த­மா­ன '­ஆரிச் 13' எனும் ­கப்­ப­லா­ன­து ட்­ரி­ஜி­பூட்­ து­றை­மு­கத்­தி­லி­ருந்­து ­சோ­ம­லி­யா­வின்­ த­லை­ந­கர்­மொ­ஹா­தி­சு­ நோக்­கி ­எண்­ணெய்­ கொண்­டு ­செல்­லும் ­வ­ழி­யில்­ இ­ரு­ ஆ­யு­தம்­ த­ரித்­த ட்­ரோ­லர்­ ப­ட­கு­க­ளில்­ வந்­த ­க­டற்­கொள்­ளை­யர்­க­ளால் கடந்த 13 ஆம் திகதி­ க­டத்­தப்­பட்­டுள்ளது.

 

இந்நிலையில் சோமா­லி­ய­ க­டற்­கொள்­ளை­யர்­க­ளால் ­க­டத்­தப்­பட்­ட­ வர்த்­த­கக் ­கப்­ப­லை­யும்­ அ­தில்­ உள்­ள­ கப்­டன்­ உள்­ளிட்ட 8 இலங்­கை­யர்­க­ளை­யும்­ வி­டு­விக்­க­ கப்­பம்­ கோ­ரப்­ப­டு­வ­தா­க­ ஐ­ரோப்­பி­ய­ ஒன்­றி­ய ­க­டற்­கொள்­ளைக்­கு­ எ­தி­ரா­ன­ பி­ரி­வு­ தெ­ரி­வித்துள்ளது.

குறித்த கப்பலில் மத்துகமவைச் சேர்ந்த ருவான் சம்பத் ( தலைமை அதிகாரி ), ஹொரணையைச் சேர்ந்த ஜே.களுபோவில ( தலைமை பொறியியலாளர்), மட்டக்குளியைச் சேர்ந்த எஸ்.ஏ. நிக்ளஸ் ( கப்டன் ), காலியைச் சேரந்த திலீப் ரணவீர ( 3 ஆம் நிலை அதிகாரி), மாத்தறையைச் சேரந்த ஜனக சமீந்திர ( 3 ஆம் நிலை பொறியியலாளர் ), கந்தானையைச் சேர்ந்த சுனில் பெரேரா ( போசன்  ), காலியைச் சேர்ந்த இந்துனில் லஹிரு ( ஏபிள் சீமன் ) , நீர்கொழும்பைச் சேர்ந்த ஏ. சண்முகம் ( குக்) ஆகியோரே சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தி வைக்கப்பட்டள்ள இலங்கையர்கள் ஆவர்.

 இந்நிலையில் வீரகேசரி இணையத்தளத்தின் செய்திக் குழுவினர் குறித்த கப்பல் கப்டனான மட்டக்குளியைச் சேர்ந்த எஸ்.ஏ. நிக்ளஸின் வீட்டிற்குச் செற்று விபரத்தை கேட்டறிந்தனர். இதன்போதே கப்பல் கப்டனின் பெறாமகளான தானியா ஜேசுதாசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தனது பெரியப்பாவின் விடுதலை குறித்து மேலும் தெரிவிக்கையில்,

எனது பெரியப்ப எமது வீட்க்கு தலைவனாகவும் எமக்கு எல்லாவளிகளிலும் பக்கபலமாக இருந்து வந்தார். அவர் ஒவ்வொரு நாளும் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சுகதுக்கங்களை பகிர்ந்துகொள்வார். என்னுடன் அவர் தொடர்பு கொள்ளாத நாளே இருக்காது. 

எப்படியாவது தொடர்புகொண்டு அவரது வேலை, எங்கு பயணிக்கவுள்ளார் போன்ற விபரங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வார். அவ்வாறு பயணிக்கும் வேளைகளில் தனக்காகவும் தனது  கடமைக்காகவும் இறைவனிடம் வேண்டுமாறு தெரிவிப்பார்.

இறுதியாக எனது பெரியப்பா இன்னும் சிலருடன் கப்பலில் இருந்து எடுத்த படத்தை எனக்கு அனுப்பியிருந்தார். அதனுடன் எனக்கு சிறிய குறுந்தகவலையும் கடந்த 8 ஆம்திகதி இரவு அனுப்பியிருந்தார். அதில் நான் மொஹாடிசுவுக்கு கப்பலில் பயணிக்கவுள்ளேன். நான் வேலைப்பளுவுடன் இருப்பேன் என குறிப்பிட்டிருந்தார்.

எனவே எனது பெரியப்பா உட்பட எட்டு பேரையும் பாதுகாப்பாக மீட்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.