Francophonie 2024 – மார்க் அய்மன் Marc Aymon மற்றும் மில்லா பெஸ்ஸன் Milla Besson ஆகியோரின் இசை நிகழ்ச்சி

Published By: Vishnu

16 Mar, 2024 | 12:16 AM
image

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிட்சர்லாந்து தூதரகம், International Organization of la Francophonie உடன் இணைந்து, கொழும்பு மற்றும் அஹங்கம பகுதிகளில் இசை நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்யவுள்ளது. வருடாந்த பிரெஞ்சு மொழி மற்றும் Francophonie கலாசாரங்கள் போன்றவற்றுடன் சுவிஸ் இசைக் கலைஞர்களான மார்க் அய்மன் Marc Aymon மற்றும் மில்லா பெஸ்ஸன் Milla Besson ஆகியோருடன் Francophonie 2024 ஐ கொண்டாடும் நோக்கில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அறிமுக நிகழ்வு மார்ச் மாதம் 16ஆம் திகதி பி.ப. 7 மணி முதல் கொழும்பு ‘Alliance Française de Colombo இல் நடைபெறும். அதனைத் தொடர்ந்து, மார்ச் 17 ஆம் திகதி பி.ப. 7.00 மணி முதல் TRAX அஹங்கமவிலும் நடைபெறும். குறித்த நிகழ்வுகளை அனைவராலும் இலவசமாக கண்டுகளிக்க முடியும்.

Master classes களும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி கட்புல, அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்திலும், மார்ச் 19ஆம் திகதி உருகுணை பல்கலைக்கழகத்திலும் நடைபெறும்.

Valais ஐச் சேர்ந்த பிரதான கலைஞரான மார்க் அய்மன் Marc Aymon, ஒரு கவிஞர் மற்றும் பாடகருமாவார். பிரெஞ்சு மொழி பேசப்படும் நாடுகளில் பெருமளவில் இசைக்கப்படும் 8 அல்பம்கள் மற்றும் 4 தனிப் பாடல்கள் போன்றவற்றி்ன் உரிமையாளராக அய்மன் திகழ்கின்றார். பரகுவே, பிரான்ஸ், புயனோஸ் அயர்ஸ், கென்யா, ருவாண்டா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் Francophonie கொண்டாட்டங்களில் இவர் தமது பாடல்களை இசைத்துள்ளார். Valais dulcimer, Drums, Kotamo, Handpan, Bockhornxylo மற்றும் Glasudu போன்ற இசைக்கருவிகளை இசைப்பதில் திறமையானவர்.

மில்லா பெஸ்ஸன் Milla Besson சுவிஸ் நாட்டின் பாடகரும் பாடலாசிரியருமாவார். இவர் சர்வதேச மட்டத்தில் பிரென்சு மொழி பேசப்படும் நாடுகளில் இசை நிகழ்வுகளை முன்னெடுத்துள்ளதுடன்,. Tim Dup, Aliose, Jérémie Kisling மற்றும் மார்க் அய்மன் Marc Aymon ஆகியோருடன் மேடை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துளார் .

இந்தப் பயணத்தில், மார்க் அய்மன் மற்றும் மில்லா பெஸ்ஸன் ஆகியோர் தமது அண்மைய வெளியீடான “Glaneurs” இன் 15 சுவிஸ் கவிதைகள் மற்றும் பாடல்களை வெளிப்படுத்துவார்கள். இது சுவிஸ் கலாசார பாரம்பரியத்தை உணர்த்துவதாக அமைந்திருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கீரிமலை நகுலேச்சரத்தில் கொடியேற்றம்!

2025-02-13 18:24:08
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச திருவிழா 

2025-02-12 17:59:41
news-image

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இணுவில் கந்தசுவாமி...

2025-02-12 17:48:53
news-image

இலங்கை பத்திரிகைத் துறையில் ஐம்பது வருடங்களுக்கு...

2025-02-12 16:03:23
news-image

மாத்தளை கந்தேநுவர அல்வத்த ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-02-11 18:45:45
news-image

கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ...

2025-02-11 18:15:22
news-image

தைப்பூசத்தை முன்னிட்டு இந்து ஆலயங்களில் விசேட...

2025-02-11 16:44:02
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியம் அங்குரார்ப்பணம்

2025-02-11 16:02:04
news-image

மட்டக்குளி கதிரானவத்தை ஶ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பாள்...

2025-02-10 18:35:26
news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-10 15:53:58
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியத்தின் அங்குரார்ப்பண...

2025-02-10 17:39:29
news-image

சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினத்தை முன்னிட்டு...

2025-02-10 11:59:51