(நெவில் அன்தனி)
ஐசிசியினால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவாறு 2026 ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்தியாவும் இலங்கையும் கூட்டாக நடத்தும் என்பதை ஐசிசி மீண்டும் உறுதிசெய்துள்ளது.
2026 ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 20 அணிகள் பங்குபற்றும்.
2026 ரி20 உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்கான முறைமையையும் ஐசிசி அங்கீகரித்துள்ளது.
இந்த வருடம் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் கூட்டாக நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதல் எட்டு இடங்களைப் பெறும் நாடுகள், வரவேற்பு நாடுகளான இந்தியாவுடனும் இலங்கையுடனும் இயல்பாகவே 2026 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெறும்.
வரவேற்பு நாடுகளின் நிரல்படுத்தல்களைப் பொறுத்து இரண்டு முதல் நான்கு வரையான மற்றைய அணிகள் தீர்மானிக்கப்படும்.
எஞ்சிய 8 நாடுகள் பிராந்திய தகுதிகாண் சுற்றுகள் மூலம் ரி20 உலகக் கிண்ணத்தில் இணையும்.
இது இவ்வாறிருக்க, இந்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு இருப்பு (ரிசேர்வ்) நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இன்றைய ஐசிசி சபைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
அத்துடன் குழு நிலைப் போட்டிகள் (லீக் சுற்று) மற்றும் சுப்பர் 8 சுற்று போட்டிகளின்போது ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடும அணிக்கு குறைந்தது ஐந்து ஓவர்கள் வீசப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் நொக் அவுட் போட்டிகளில் ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணிக்கு குறைந்தபட்சம் 10 ஓவர்கள் வீசப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி மேலும் அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM