இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமானது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலிய அணி இன்றைய ஆட்டநேர முடிவின் போது 4 விக்கட்டுகளை இழந்து 299 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அவுஸ்திரேலிய அணிசார்பில் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 117 ஓட்டங்களையும், கிலேன் மெக்ஸ்வெல் 82 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிவருகின்றனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் உமேஸ் யாதவ் 2 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார்.