செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த அடிப்படைகள் அவசியம் - தமிழ்நாடு பேராசிரியர் ஆறுமுகம்

Published By: Rajeeban

15 Mar, 2024 | 03:43 PM
image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது பெருமளவு அதிகரித்துள்ள நிலையில்  ஒழுக்கவியல் சார்ந்த அடிப்படைகள் அவசியம். அவ்வாறா ஒழுக்கவியல் அடிப்படையில்லாவிட்டால் முடிவற்ற நெருக்கடிகள் உருவாகலாம் என தமிழ் நாடு உட்கட்டுமான நிதி முகாமைத்துவ தலைவரும் டான்சம் அமைப்பின் பணிப்பாளருமான  பேராசிரியர்எம் ஆறுமுகம் தெரிவித்தார்

வவுனியாவில் இடம்பெற்ற ஆசிய பசுபிக்சமாதான ஆராய்ச்சி சங்கத்தின்2024ம் ஆண்டுக்கான   சமாதானம் மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சர்வதேச மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்

அவர் மேலும் குறிப்பிட்டதாவது

கடந்த 35 வருடங்களாக நான் செயற்கை நுண்ணறிவு தொடர்பிலான விடயங்களில் ஈடுபட்டுள்ளேன்.

இது ஒன்றும் இன்று நேற்று உருவான புதிய விடயமல்ல  செயற்கை நுண்ணறிவு என்பது 30 முதல் ஐம்பது வருடங்கள் பழமையானது.

ஆனால் உலகம் தற்போதுதான் சகலதுறைகளிலும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

எந்த துறையிலும் செயற்கை நுண்ணறிவு முழுமையாக நுழைந்துள்ளது.

சட்ஜிபிடியின் அடுத்த வடிவம் வெளியாவதற்கு  இரண்டு மூன்று வருடங்கள் எடுக்கலாம் என நாங்கள் கருதினோம் ஆனால் ஒரு வருட காலத்திற்குள் அதன் அடுத்த வடிவம் வெளியாகிவிட்டது.

செயற்கை நுண்ணறிவை  உயிரியல் தொழில்நுட்பட்  மரபணுதொழில்நுட்பம் ஆகியவற்றிலேயே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

செயற்கை  மரபணுவை உருவாக்க முயல்கின்றனர்  நீங்கள் உங்கள் மனிதனை உருவாக்கலாம்.

பொதுவான மரபணுவை உருவாக்கலாம். ஆனால் இது பெரும் ஆபத்துக்களையும் விளைவுகளையும் உருவாக்கும்.

காலநிலை குறித்த விடயங்களில் இதன் பயன்பாடு முக்கியமானதாக அமையும்.

காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாங்கள் அனைவரும் அனுபவிக்கின்றோம் எதிர்கொண்டுள்ளோம்.மழை இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது அல்லது குறுகிய நேரத்தில் பெரும் மழை பொழிகின்றது செனனை 900 மில்லிமீற்றர் மழையை குறுகிய நேரத்தில் எதிர்கொண்டது.

காலநிலை விவகாரத்தை கையாள்வதற்காக  செயற்கை நுண்ணிறிவை அடிப்படையாக கொண்ட பல எதிர்வுகூறல்களை எதிர்காலத்தில் உருவாக்குவார்கள் காற்றின் வேகம் மழைவீழ்ச்சி போன்றவற்றை கண்காணிப்பதற்கு இது உதவியாக அமையும்.

பாதுகாப்பு தொழில்துறையில் இது மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவரும்  ஏவுகணை தொழில்நுட்பம் போன்றவை மாற்றமடையும்.

ஈரானிற்குள் வைத்து அந்த நாட்டின் விஞ்ஞானியை இஸ்ரேல் கொலை செய்ததை  செய்மதி தொழி;ல்நுட்பத்துடன் செயற்கை நுண்ணறிவை இணைத்தே கண்டுபிடித்தார்கள்.

ஆனால் செயற்கை நுண்ணறிவு என்ற விடயத்தில் தடுமாற்றங்களும் குழப்பங்களும் உள்ளன.

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது பெருமளவு அதிகரித்துள்ள நிலையில்  ஒழுக்கவியல் சார்ந்த அடிப்படைகள் அவசியம்.

இல்லாவிட்டால் முடிவற்ற நெருக்கடிகள் பிரச்சிளைகள் உருவாகலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவின் நடமாடும் மருத்துவமனைகள் ; ஆக்ராவில்...

2024-05-22 20:10:13
news-image

“பிக்சல் ப்ளூம்” கொழும்பு தாமரை கோபுரத்தில்...

2024-05-11 09:37:56
news-image

கடந்த வருடம் இலங்கையில் கணினிகளில் ஒரு...

2024-05-10 12:24:26
news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07