மாலபே சைட்டம்  தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அதனை உடனடியாக மூடிவிடுமாறும் கோரி, சைட்டம் எதிர்ப்பு  ஆசிரிய, அதிபர் ஒன்றியம் இன்று கண்டியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.

கண்டி ஜோர்ஜ் ஈ .டி சில்வா பூங்காவில் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட சைட்டம் எதிர்ப்பு ஆசிரிய அதிபர் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள்  சைட்டம் என்ற தனியார் வைத்தியக் கல்லூரி உடனடியாக மூடப்பட வேண்டும் என்றும் அவ்வாறு அதனை  மூடுவதற்கு அரசு தடையாக நிற்குமானால் இலட்சக்கணக்கான மக்கள் இணைந்து பாரிய எதிர்ப்பு நடவடிக்களை முன்னெடுக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.