(நா.தனுஜா)
'குறைந்தபட்சம் பகுதியளவிலான பொறுப்புக்கூறலையேனும் உறுதிசெய்யவேண்டிய நிலையில் இருக்கும் பிரச்சினைக்குரிய கட்டமைப்பு' எனும் நிலையிலிருந்து தற்போது 'இந்திய - பசுபிக் பிராந்திய கடற்பாதுகாப்பில் மிகமுக்கிய பங்காளி' எனும் நிலையை நோக்கி அமெரிக்கா இலங்கை இராணுவத்துக்கு மீள்வரைவிலக்கணம் வழங்குவதாக சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் விமர்சித்துள்ளார்.
இலங்கையின் கடற்பிராந்தியம்சார் விழிப்புணர்வு மற்றும் இயலுமையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களம், கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகம் மற்றும் இலங்கை விமானப்படை என்பன இணைந்து இம்மாதம் 12 - 14 ஆம் திகதி வரை இரத்மலானையில் அமைந்துள்ள இலங்கை விமானப்படைத்தளத்தில் கண்காணிப்பு விமானங்களின் முன்னோட்டமொன்றை நடாத்தியிருந்தன.
இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், இலங்கையின் கடற்பிராந்திய வளப்பாதுகாப்பை விரிவுபடுத்தல், சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை முறியடித்தல், தனித்துவம் வாய்ந்த பொருளாதார வலயத்தைக் கண்காணித்தல் மற்றும் கடற்பிராந்தியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் ஆகியவற்றுக்கு உதவக்கூடியவகையில் நடாத்தப்பட்ட முன்னோட்டத்தின்போது அமெரிக்காவுக்குச் சொந்தமான விமானத்தில் தானும் பறந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று மனிதாபிமான உதவிகள், அனர்த்தங்களின்போது உதவிகளை வழங்கல், கடற்பிராந்தியப்பாதுகாப்பு ஆகிய விடயங்களில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதை முன்னிறுத்தி அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயலாற்றிவருவதாகவும் அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அமெரிக்கத்தூதுவரின் எக்ஸ் தளப்பதிவை மேற்கோள்காட்டிப் பதிவிட்டுள்ள சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன், 'குறைந்தபட்சம் பகுதியளவிலான பொறுப்புக்கூறலையேனும் உறுதிசெய்யவேண்டிய நிலையில் இருக்கும் பிரச்சினைக்குரிய கட்டமைப்பு எனும் நிலையிலிருந்து தற்போது இந்திய - பசுபிக் பிராந்திய கடற்பாதுகாப்பில் மிகமுக்கிய பங்காளி எனும் நிலையை நோக்கி இலங்கை இராணுவத்துக்கு அமெரிக்கா மீள்வரைவிலக்கணம் வழங்குவதைப் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கின்றது' என விமர்சித்துள்ளார்.
அதேவேளை அமெரிக்கா போர்க்குற்றவாளிகளுடன் இணைந்து பணியாற்றுவதாகவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் வெளியிடப்பட்ட புத்தகத்தில் 'எமது அரசாங்கத்துக்கு எதிராக வெளியக சக்திகள் செயற்பட்டன' எனக் கூறப்பட்டிருப்பது உண்மை என்பதை இதன்மூலம் புரிந்துகொள்ளமுடிகின்றது எனவும் மேலும் சில சமூகவலைத்தளப் பயனாளர்கள் இதனை விமர்சித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM