(கண்ணதாசன் ஷிரோமி)
உலகில் எல்லா முக்கியமான அம்சங்களுக்கும் ஆண்டுதோறும் தினங்கள் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டும், கொண்டாடப்பட்டும் வருகிறது. அந்த வகையில் உலக சிறுநீரக தினமானது ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமையன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இன்று (14) சர்வதேச ரீதியில் சிறுநீரகம் சார்ந்த நோய்களால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்படைந்தும், உயிரிழக்கும் நிலையிலும் இருக்கின்றனர்.
நமது நல்வாழ்வுக்கு ஆரோக்கியமான சிறுநீரகம் என்பது எந்தளவு அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையிலும் சிறுநீரகம் சார்ந்த நோய்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
“அனைவரும் சிறுநீரக ஆரோக்கியம், - பராமரிப்பு மற்றும் உரிய மருத்துவ நடைமுறை அணுகலை மேம்படுத்தல் அவசியம்” என்பது இம்முறை உலக சிறுநீரக தினத்துக்கான கருப்பொருள் ஆகும்.
உலகின் முதலாவது சிறுநீரக தினமானது 2006ஆம் ஆண்டு 66 நாடுகளால் மாத்திரம் கொண்டாடப்பட்டது.
தற்போது உலகளாவிய ரீதியில் பெரும்பாலான நாடுகளில் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. 'உங்கள் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக உள்ளதா?" என்ற தலைப்பிலேயே உலகின் முதலாவது சிறுநீரக தினம் கொண்டாடப்பட்டது.
எமது மனித உடலில் ஒவ்வொரு பாகமும் அதற்கான முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
மனித உடலின் நைதரசன் கழிவுப்பொருட்களை அகற்றி உடலின் ஆரோக்கியத்தைக் காக்க பல வகைகளில் துணைபுரிவது சிறுநீரகமாகும்.
சிறுநீரகம் அவரை வித்து வடிவிலான அமைப்புடையது. சிறுநீரகம் சிறுநீரகச் சோடியையும் அதனுடன் தொடர்புடைய பல்வேறு பகுதிகளையும் கொண்டுள்ளது. ஒரு நாளைக்கு உட்கொள்கின்ற அளவிலான கழிவுகள் உடலில் இருந்து வெளியேற்றப்படுவது அனுசேபமாகும்.
முக்கியமாக, கழிவுகளின் வெளியேற்றம் நமது உடலின் வெப்பத்தை சீர்ப்படுத்துகிறது.
சிறுநீரகத்துடன் தொடர்புடைய நோய்களாக சிறுநீரக செயலிழப்பு (Reanal failure), சிறுநீரக அழற்சி (Nephritis), சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப்பையில் உருவாகும் கற்கள் (Stones in kidney and bladder) என்பவற்றை குறிப்பிடலாம்.
சிறுநீரக பாதிப்பு என்பது இன்று சாதாரண பிரச்சினையாகிவிட்டது. முன்பு வயதானவர்களை குறிவைத்த இவ்வகை நோய்கள் தற்காலத்தில் இளைஞர்களையும் பாதிக்கத் தொடங்கியுள்ளன. இப்படி சிறுநீரக பிரச்சினை அதிகரிக்க அதன் அறிகுறிகளில்லா பாதிப்பே காரணம்.
ஆம்.. பொதுவாக சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால் உடனே அதன் அறிகுறிகள் தெரியாது. அது தீவிர நிலையை அடைந்த பின்பே அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். எனவேதான் இது நாட்பட்ட சிகிச்சை எடுக்கும் பிரச்சினையாக உருவெடுக்கிறது.
ஆரோக்கியமான உணவுப் பழக்கம், புகைத்தல் மற்றும் புகையிலை போன்றவற்றின் பாவனையை தவிர்த்தல், வலி நிவாரணி மாத்திரைகளை (Pain relievers) உட்கொள்வதை குறைத்துக்கொள்ளல், அதிகமாக நீர் அருந்துதல் மற்றும் வருடத்துக்கு ஒரு முறையேனும் சிறுநீரகம் தொடர்பான பரிசோதனைகளை மேறகொள்ளுதல் போன்றவற்றின் மூலம் எமது சிறுநீரகங்களை நோய்களில் இருந்து பாதுகாக்க முடியும்.
சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தினை அறிந்து, சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பேணுவதே இத்தினத்தை கொண்டாடுவதற்கான பிரதானமான நோக்கமாகும்.
எமது சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது எமது நல்வாழ்வுக்கு வழிவகுக்கும். எனவே, சுயநலம் கருதியேனும் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாத்து ஆயுட்காலத்தை நீடிக்கச் செய்திடுவோம்!
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM