பாரா­ளு­மன்றத் தேர்­த­லின்­போது எனது வாக்குகள் கள­வா­டப்­பட்­டுள்­ளன. அது தொடர்­பான சகல விட­யங்­களும் எனக்குத் தெரியுமென முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்­துள்ளார்.

நேற்­று­முன்­தினம் யாழில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்­றிலே அவர் இதனைத் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் ஆங்­கில நாளேடு ஒன்­றுக்கு வழங்­கிய செவ்­வியில் அர­சி­யலில் தோற்றுப் போன­வர்கள் அல்­லது பாரா­ளு­மன்­றத்தில் இடம்­ கிடைக்­கா­த­வர்கள் இணைந்து தமிழ் மக்கள் பேர­வையை உரு­வாக்­கி­யுள்­ள­தாகத் தெரி­வித்தார்.

தமிழ் மக்கள் பேர­வையின் பேச்­சாளர் நான் இல்லை. எனினும் என்­னு­டைய பெயரைக் குறிப்­பிட்டோ என் கட்­சியின் பெயரைக் குறிப்­பிட்டோ முன்­வைக்­கப்­படு­கின்ற கருத்­துக்­க­ளுக்கும் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கும் பதில் கூற­வேண்­டிய கடமை எனக்­குண்டு.

எனவே அவர் குறிப்­பி­டு­வது போன்று நாங்கள் பாரா­ளு­மன்றக் கதி­ரைக்­கா­கவோ மாகாண சபை கதி­ரைக்­கா­கவோ அர­சி­ய­லுக்கு வர­வில்லை. தமிழ் மக்­க­ளுக்­கான தீர்­வுக்­கான போராட்­டத்தில் 20 வயதில் இணைந்து இன்று 37 வரு­டங்­க­ளா­கி­விட்­டன. எனவே என்­னு­டைய அர­சியல் பயணம் என்­பது நீண்ட நெடிய பாதை­யைக் ­கொண்­டது.

மேலும் நாங்கள் தேர்­தலில் தோற்­று­விட்டோம் என்­ப­தற்­காக யாருக்கு எதி­ரா­கவும் கொடி பிடிக்­க­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. அதற்­காக நாங்கள் மக்­களை விட்டு ஓட­வு­மில்லை. தொடர்ந்தும் மக்­க­ளுக்­கான சேவையைச் செய்தே வரு­கின்றோம்.

அத்­துடன் கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் நான் தோற்­றுப்­போ­க­வில்லை. 30 ஆயிரம் வாக்­க­ளுக்கும் அதி­க­மான வாக்­கு­களைப் பெற்­றி­ருந்தேன். எனினும் என்­னு­டைய மேல­திக வாக்­குகள் கள­வா­டப்­பட்­டி­ருந்­தன.

எனது வாக்­குகள் யார் யாருக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டன? இதிலே யார் யார் சம்­பந்­தப்­பட்­டுள்­ளார்கள்? எந்த எந்த அதி­கா­ரிகள் தொடர்­பு­பட்­டுள்­ளார்கள் என்ற சகல விட­யங்­களும் தற்­போது நான் நம்­பத்­த­குந்­த­வர்­களின் தகவல் மூலம் அறிந்­துள்ளேன்.

அப்­ப­டி­யானால் நீதி­மன்றம் செல்ல வேண்­டி­ய­து­தானே என்று சிலர் கேட்கலாம். என்னைப் பொறுத்­த­வரை இலங்­கையில் இவ்­வா­றான வழக்­குகளுக்கு உரிய காலத்திற்குள் தீர்ப்பு வழங்­கப்­படாது. அது 5 வரு­டமோ 10 வருடமோ ஆகலாம். எனவே அதற்காக நான் எனது சொத்தை விற்று வழக்கு நடத்தவேண்டிய அவசியமில்லை. எனவே என் பெயர் குறிப்பிட்டு என் கட்சியின் பெயர் குறிப்பிட்டு முன்வைக்கப்படுகின்ற கருத்துக்களை வன்மையாகக் கண்டிக்கின்-றேன் என்றார்.