(எம்.மனோசித்ரா)
சீன இராணுவ உதவி திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சிற்கு வெடிகுண்டுகளை செயழிலக்கச் செய்யும் இயந்திரங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூ சென்ஹொங், பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோரிடம் குறித்த உபகரணங்கள் புதன்கிழமை (13) கையளிக்கப்பட்டுள்ளன.
இராணுவத்தலைமையகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உபகரணங்களைப் பெற்றுக் கொள்ளும் ஆவணத்தில் ஜெனரல் கமல் குணரத்தன கையெழுத்திட்தோடு, அவற்றை கையளிக்கும் ஆவணத்தில் சீனத்தூதுவர் கையெழுத்திட்டார்.
இவ்வாறு கைளிக்கப்பட்ட உபகரணத் தொகுதியில் வெடிபொருட்களை இனங்கண்டு அவற்றை செயழிக்கச் செய்யும் REOD 4000 என்ற ரொபோ இயந்திரங்கள் 18, வெடிபொருட்களை ஒரு இடத்திலிருந்து பிரிதொரு இடத்துக்கு கொண்டு செல்லும் இயலுமையுடைய REOD 400 ரக ரோபோக்கள் 18, வெடி பொருட்களிடமிருந்து பாதுகாக்கக் கூடிய 10 பாதுகாப்பு அங்கிகள், வெடி பொருட்களிடமிருந்து பாதுகாப்பு பெறக் கூடிய 10 வாயு தாங்கிகள் மற்றும் வெடிபொருட்களை செயழிக்கச் செய்யும் இயந்திரங்கள் என்பன உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM