வவுனியாவில் நெல் ஏற்றிச்சென்ற வாகனம் குடைசாய்ந்தது ; ஒருவர் காயம்

Published By: Digital Desk 3

14 Mar, 2024 | 10:44 AM
image

வவுனியா புளியங்குளம் பகுதியில் நெல் மூடைகளை ஏற்றிச்சென்ற வாகனம் குடைசாய்ந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் காயமடைந்தார். குறித்த விபத்து புதன்கிழமை (13) மாலை இடம்பெற்றது.

விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவிலிருந்து நெல் மூடைகளை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கிவந்துகொண்டிருந்த கென்ரர் ரக வாகனம் புளியங்குளம் சந்திக்கு அண்மையில் சென்றுகொண்டிருந்த போது வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்திற்குள்ளானது.

விபத்தில் வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்தார்.வாகனத்தின் முன்சக்கரம் வெடித்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதி அமைச்சர் குறித்து ரஞ்சன் ராமநாயக்கவின்...

2026-07-11 12:33:36
news-image

நாட்டில் டெங்கு மரணங்கள் 47 ஆக...

2026-07-11 12:36:14
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இடம்பெற்ற...

2026-07-11 12:18:21
news-image

தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதி...

2026-07-11 11:53:15
news-image

பறவை மோதியதால் அவசர நிலைக்குள்ளான துருக்கி...

2026-07-11 11:24:47
news-image

'மாறிவரும் உலகுடனான ஒத்திசைவு ' –...

2026-07-11 11:45:22
news-image

சிறைக் கைதிகளுக்கான ஜனாதிபதி பொது மன்னிப்பு:...

2026-07-11 11:25:25
news-image

தீயணைப்பு அவசர இலக்கத்தில் கோளாறு ;...

2026-07-11 11:09:58
news-image

'எல் நினோ' காலநிலை மாற்றம் தீவிரம்...

2026-07-11 10:17:48
news-image

கட்டுநாயக்கவிலிருந்து 246 பயணிகளுடன் புறப்பட்ட துருக்கி...

2026-07-11 10:32:25
news-image

மாளிகாவத்தையில் போதைப்பொருட்களுடன் 19 வயது இளைஞன்...

2026-07-11 09:10:26
news-image

பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாத...

2026-07-11 08:55:42