தயாரிப்பு : கார்த்திக் கல்ட் கிரியேஷன்ஸ்
நடிகர்கள் : விஸ்வக் சென், சாந்தினி சௌத்ரி, அபிநயா, ஹரிகா பெட்டா, மொஹமத் சமத், தயானந்த் ரெட்டி மற்றும் பலர்.
இயக்கம் : வித்யாதர் ககிடா
மதிப்பீடு : 3/5
தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான விஸ்வக் சென் நடிப்பில் தயாராகி, வெளியாகி இருக்கும் 'காமி' எனும் பயணத்தை பிரதான அம்சமாக கொண்ட சாகசம் நிறைந்த இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை காண்போம்.
காமி என்றால் தேடல் என பொருள். கதையின் நாயகனான சங்கர் (விஸ்வக் சென்) வட இந்திய பகுதி ஒன்றில் அகோரியாக இருக்கிறார். இவருக்கு மிகவும் அரிதான ஹாபிடோபியா எனும் மனித தொடுகை ஒவ்வாமை எனும் பாதிப்பு இருக்கிறது. இதனால் அவர் இருக்கும் குழுவிலிருந்து வெளியேற வேண்டும் என சக அகோரிகள் வற்புறுத்துகிறார்கள்.
மேலும், இதனை அவர்கள் சாபம் என்றும் குறிப்பிட்டு, குழுவிலிருந்து வெளியேறுமாறு சொல்கிறார்கள். அந்த அகோரிகள் குழுவின் தலைவர், சங்கரிடம், 'நீ பிரக்யாராஜில் உள்ள கேதர் பாபாவை சந்தித்து, கர்மா கடன்களை கழிப்பதற்கான தீர்வைத் தேடிக் கொள்' என ஆலோசனை தருகிறார். இதற்காக அவர் பிரக்யா ராஜ் செல்கிறார். அங்கு கேதார் பாபா இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார் என அவரது சீடர் சொல்கிறார். மேலும் உன்னிடம் சமர்ப்பிக்குமாறு ஒரு குறிப்பையும், வரைபடத்தையும் அவர் கொடுத்திருக்கிறார் எனச் சொல்லி அதனை கேதர் பாபாவின் சீடர் சங்கரிடம் தருகிறார். அது அவருக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் சிகிச்சை குறிப்பாகும்.
அதன்படி இமயமலை பகுதியில் அடர்ந்த பனி பிரதேசத்தில் துரோனகிரி எனும் மலைப்பகுதியில் 36 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரிதாக பூக்கும் ஒளிரும் காளானை (மாலி பத்ரா) கண்டறிந்து அதனை கைப்பற்றினால், உன்னுடைய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்கிறார்கள். மேலும் இன்றும் 15 நாட்கள் தான் அதற்கான இடைவெளி இருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார்கள். இதனால் சங்கர் சற்றும் தாமதிக்காமல் தன்னுடைய பயணத்தை தொடங்குகிறார். இதன் போது ஜானவி (சாந்தினி சௌத்ரி) எனும் மருத்துவர் இவருக்கு உதவியாக வருகிறார். இவர்கள் பல தடைகளை கடந்து அந்த அறிய ஒளிரும் காளானை (மாலிபத்ரா) கண்டறிந்தார்களா? இல்லையா? என்பதும், அதன் பிறகு இவர் தான் யார்? என்பதை தெரிந்து கொண்டாரா? இல்லையா? என்பதும் ஒரு பகுதி கதை.
இதனுடன் ஆந்திராவில் உள்ள துர்கா எனும் தேவதாசிக்கு உமா என்ற ஒரு மகள் பிறக்கிறார். ஊர்மக்கள் துர்காவிற்கு பிறகு உமாவை தேவதாசி ஆக்க விரும்புகிறார்கள். இதனை உமாவின் தாயார், துர்காவின் தாயார் மற்றும் அவரது உறவினர் விரும்பாமல் உமாவை ஊரிலிருந்து வெளியேற்ற முயற்சிக்கிறார்கள். ஆனால் அது தோல்வியில் முடிய, உமாவை தேவதாசியாக்க ஊர் மக்கள் தீர்மானிக்கிறார்கள். ஆனால் அவள் கான்ஜினிடல் அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் மருத்துவ குறைப்பாட்டு பாதிப்பிற்குள்ளாகியிருக்கிறார். இவருடைய எதிர்காலம் என்னவாகிறது என்பது ஒரு பகுதி கதை.
இந்தோ சீன எல்லை பகுதியில் சட்ட விரோதமாக லோபோடோமி தொடர்பான ஆய்வினை ஒரு கும்பல் மேற்கொள்கிறது. இதில் CT-334 என எண் இடப்பட்ட ஒரு இளைஞன்.. அந்த ஆய்வகத்திலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதும் ஒரு பகுதி கதை.
இந்த மூன்று கதையையும் ஹைப்பர் லிங்க் வகையில் இணைத்து.. நான்- லீனியர் பாணியில் சொல்லப்பட்டிருக்கும் படைப்புதான் காமி.
படத்தொகுப்பு தான் இந்தப் படத்தின் பலம் மற்றும் பலவீனம். ஒளிப்பதிவு பின்னணி இசை ஆகியவை சர்வதேச தரத்தில் இருக்கிறது. இயக்குநர் வழக்கமான பாணியிலிருந்து வித்தியாசமான கதை சொல்லல் மூலம் ஒரு திரை அனுபவத்தை வழங்க வேண்டும் என விரும்பி இருக்கிறார். அதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார் என சொல்லலாம். ஆனால் அந்த வெற்றி முழுமையான வெற்றியாக இல்லாமல் சிறிய அளவிலான வெற்றி என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் மெதுவாக நகரும் திரைக்கதை.
கதையின் நாயகன் எப்போதும் தலையை மறைக்கும் ஆடையை அணிந்திருப்பது எந்த வகையான குறியீடு என்பதனை ரசிகர்களின் யூகத்திற்கு விட்டிருக்கிறார். மேலும் உச்சகட்ட காட்சியில் அவர் ஜானவியின் மடியில் படுத்து உறங்குவதும்.. அதன் போது அவர் கைவிரலால் தலையைக் கோதுமாறு கோருவதும்... உமா என்ற இளம் பெண்ணின் மருத்துவ ரீதியான குறைபாட்டை பின்னால் மருத்துவர் ஒருவர் மூலம் விவரிக்கும் போது, அந்த கதாபாத்திரத்திற்கும் நாயகனுக்கும் உள்ள தொடர்பை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இதனை மிகச் சிலரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்பது தான் சோகம்.
ஆறாண்டுகளாக இந்த திரைப்படத்தை இந்த குழுவினர் உருவாக்கி இருக்கிறார்கள். அதனால் காட்சி படமாக்கத்தில் நேர்த்தி தெரிகிறது. ஆனால் திரைக்கதையில் பல இடங்களில் குறைகள் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக பனிப் படர்ந்த பிரதேசத்தின் நாயகி கையுறை அணியாமல் தோன்றுவதை குறிப்பிடலாம்.
நடிகர் விஸ்வக் சென் தனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி திறமையை நிரூபித்திருக்கிறார். CT -333 எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் மொஹமத் சமத் நன்றாக நடித்து ரசிகர்களின் மனதில் பதிக்கிறார்.
காமி - திசை மாறிய தேடல்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM