இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சந்தீப் சிங் இயக்கத்தில் தயாராகும் ' தி ப்ரைட் ஆஃப் பாரத்- சத்ரபதி சிவாஜி மகாராஜ்' எனும் திரைப்படத்தின் மூலம் பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தியும், பின்னணி பாடகியுமான ஜனாயீ போஸ்லே நடிகையாக அறிமுகமாகிறார்.
தமிழ், இந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் பின்னணி பாடி கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றிருக்கும் பிரபல பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தி ஜனாயீ போஸ்லே பின்னணி பாடகியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் முதல் முறையாக திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வீர வரலாற்றை தழுவித் தயாராகும் ' தி ப்ரைட் ஆஃப் பாரத்- சத்ரபதி சிவாஜி மகாராஜ்' எனும் பெயரில் திரைப்படமொன்று தயாராகிறது. சந்தீப் சிங் இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தின் மூலம் பாடகி ஜனாயீ போஸ்லே நடிகையாக அறிமுகமாகிறார். இவர் இந்த படத்தில் சத்ரபதி சிவாஜியின் மனைவியான ராணி சாய் போன்ஸாலே கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக படக்குழுவினர் எக்ஸ் தளத்தில் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். பின்னணி பாடகியாக கலை உலக சேவையை தொடங்கியிருக்கும் ஜனாயீ போஸ்லே நடிகையாகவும் வெற்றி பெற வேண்டும் என பொலிவுட் திரையுலகினர் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகினர் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM