ஆசிய சட்டத்தரணிகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டி வியட்னாமில் இடம்பெறவுள்ள நிலையில், அதில் கலந்துக்கொள்வதற்காக நாமல் அங்கு செல்லவுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த வாரம் வியட்னாம் செல்வதற்கான அனுமதியை நீதிமன்றத்தில் கோரியதை அடுத்து அவருக்கு எதிரான தடையுத்தரவு நீக்கப்பட்டுள்ளது.

நாமல் வெளிநாடு செல்வதற்கு தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.