bestweb

திருட்டு வழக்கில் குற்றவாளி : நியூஸிலாந்து முன்னாள் எம்.பி. ஒப்புக்கொண்டார்

Published By: Sethu

13 Mar, 2024 | 01:18 PM
image

நியூஸிலாந்து பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தபோது, கடையொன்றில் திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோல்ரிஸ் கஹ்ரமான், தான் குற்றவாளி என  நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். 

43 வயதான கஹ்ரமான் திருட்டுக் குற்றச்சாட்டையடுத்து கடந்த ஜனவரி 16 ஆம் திகதி, பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருந்தார். 

இந்நிலையில், இது தொடர்பான வழக்கில், தான் குற்றவாளி என ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை கஹ்ரமான் ஒப்புக்கொண்டார்.

ஈரானில் பிறந்த கோல்ரிஸ் கஹ்ரமான், தனது குடும்பத்தினருக்கு நியூஸிலாந்தில் அரசியல் புகலிடம் கிடைத்தபோது நியூஸிலாந்துக்கு புலம்பெயர்ந்தவர். 

சட்டத்தரணியான அவர் 2017 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். 

நியூஸிலாந்துக்கு அகதியாக வந்த பின்னர் அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவான முதல் நபர் கோல்ரிஸ் கஹ்ரமான் ஆவார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆஸ்திரேலியாவில் 12வது உலகத் தமிழ் வம்சாவளி...

2025-07-19 02:08:50
news-image

கருவிலேயே முன்பதிவு செய்து பிறந்தபின்னர் விற்பனை...

2025-07-18 16:10:16
news-image

தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ பயங்கரவாத அமைப்பாக...

2025-07-18 14:37:03
news-image

பாக்கிஸ்தானில் தொடரும் கனமழையால் 170க்கும் அதிகமானவர்கள்...

2025-07-18 13:45:07
news-image

நாயின் உயிரை காப்பாற்ற முயன்ற சிறுவன்...

2025-07-18 13:59:41
news-image

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு மருத்துவ பரிசோதனை...

2025-07-18 12:26:16
news-image

பௌத்தமதகுருமார் மோசமான விதத்தில் நடந்துகொள்கின்றார்கள் -...

2025-07-18 11:16:42
news-image

காசாவின் ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயம் மீது...

2025-07-18 08:02:09
news-image

செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய பாறை 4.3...

2025-07-17 13:14:07
news-image

பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிரான பிடியாணையை இரத்துசெய்யவேண்டும்...

2025-07-17 12:07:06
news-image

ஈராக்கில் தீவிபத்தில் 50க்கும் அதிகமானவர்கள் பலி

2025-07-17 11:51:39
news-image

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி...

2025-07-17 11:34:18