எனது கணவரின் மரணத்திற்கு காரைநகர் கடற்படையும் ஒரு காரணம் - யாழில் கடத்திக் கொல்லப்பட்டவரின் மனைவி குற்றச்சாட்டு

13 Mar, 2024 | 05:02 PM
image

எனது கணவரின் kரணத்திற்கு காரைநகர் கடற்படையும் ஒரு காரணம் என யாழ்ப்பாணத்தில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தரின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். 

காரைநகர் பகுதிக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த கணவன், மனைவி  இருவரையும் வழியில் கடத்திச் சென்ற வன்முறை கும்பல் கணவனை படுகொலை செய்தது. 

இது தொடர்பாக உயிரிழந்தவரின் மனைவி தெரிவிக்கையில், 

காரைநகருக்கு சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளில் நானும் எனது கணவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில், பொன்னாலை பாலத்துக்கு அருகில் எம்மை வழிமறித்த கும்பல் வாகனத்தில் எம்மை கடத்த முயற்சித்தனர். 

அவ்வேளை, நானும் கணவரும் அவர்களிடம் இருந்து தப்பித்து அருகில் இருந்த கடற்படை முகாமுக்குள் தஞ்சம் புகுந்தோம். கடற்படையினர் எம்மை அங்கிருந்து விரட்டினார்கள். 

"எங்களை கடத்த போறாங்க, எங்களை காப்பாற்றுங்க" என கடற்படையிடம் மன்றாடினோம். ஆனால், அவர்கள் எங்களை முகாமில் இருந்து துரத்தினார்கள். 

அவ்வேளையிலே எம்மை அவர்கள் வாகனத்தில் கடத்திச் சென்றனர். 

கடற்படையினர் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டு, எமக்கு அடைக்கலம் கொடுத்திருந்தால், எனது கணவரின் உயிர் பிரிந்திருக்காது. எனது கணவரின் சாவுக்கு கடற்படையும் ஒரு விதத்தில் காரணம் என தெரிவித்தார். 

உயிரிழந்தவரின் உறவினர்கள் கூறுகையில்,

கடற்படையினர் அடைக்கலம் கொடுக்காமல் இருந்தாலும், தமது முகாமுக்கு அருகில் வாகனத்துடன் நின்ற கும்பலை துரத்திவிட்டு, இவர்களை அனுப்பி வைத்திருக்கலாம். அல்லது வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருக்கலாம். 

கடற்படையின் கண் முன் இருவரை வாகனத்தில் வந்தவர்கள் கடத்திச் சென்றபோதும், கடற்படையினர் அதனை தடுக்காமலும், கடத்தல் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்காமலும் இருந்ததால், கடற்படை மீதும் எங்களுக்கு சந்தேகம் வருகிறது என தெரிவித்தனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாணய நிதியமின்றி நாட்டை கட்டியெழுப்புவோம் என்று...

2024-06-15 18:12:22
news-image

தேர்தல் கால பிரச்சாரமாக 13ஆவது திருத்தத்தை...

2024-06-15 18:29:03
news-image

இலஞ்சம் பெற்ற நீர்ப்பாசன திணைக்கள எந்திரியும்...

2024-06-15 16:55:52
news-image

ருமேனியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக்...

2024-06-15 16:39:31
news-image

கிழக்கு மாகாணத்தின் அமைச்சுகளுக்கு ஆளுநரால் புதிய...

2024-06-15 16:56:44
news-image

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியில் 70 மாணவர்களின்...

2024-06-15 15:11:12
news-image

தலைமன்னார்- கவயன் குடியிருப்பு பகுதியில் அடாத்தாகப்...

2024-06-15 15:43:02
news-image

அடுத்த வாரம் இலங்கை வருகிறார் இந்திய...

2024-06-15 15:18:37
news-image

10 ஆவது சர்வதேச யோகா தினத்தை...

2024-06-15 14:41:09
news-image

கண்டியில் சக மாணவனை கத்தியால் குத்திய...

2024-06-15 13:44:03
news-image

மயிலை வேட்டையாடி உண்ட வெளிநாட்டவர்களும் வேடுவ...

2024-06-15 14:40:39
news-image

இன்றைய மரக்கறி விலைகள்

2024-06-15 13:15:00