(எம்.மனோசித்ரா)
இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகள் மற்றும் அர்ப்பணிப்புகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் மின்சக்தி மற்றும் நிதி அமைச்சிற்கிடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவின் பங்குபற்றலுடன் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் தலைமையிலான குழு, மின்சாரத் துறையில் கட்டணக் குறைப்பு, 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை மின்சாரசபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் என்பவற்றின் இருப்புநிலைகள், அரசுக்கு சொந்தமான மின்சார விநியோக நிறுவனத்தின் தற்போதைய நிதி நிலைகள் ஆகியவற்றை ஆராய்ந்ததாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
மேலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கொள்கைகள் மற்றும் தரநிலைகள், மொத்த விநியோக பரிவர்த்தனை கணக்கு, அனுப்பப்படும் தணிக்கை, நிலுவையில் உள்ள கொடுப்பனவுகள், 2024க்கான முன்பதிவுகள், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை சூத்திரம் மற்றும் அதன் செயல்பாடுகள் ஆகியவை தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் காஞ்சன மேலும் தெரிவித்தார்.
இதே வேளை மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் முதலீடுகள் தொடர்பில் இந்தியாவுடன் விசேட பேச்சுவார்த்தையொன்றும் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சின் செயலாளர் ஸ்ரீ பூபிந்தர் சிங் பல்லா தலைமையிலான குழு மற்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கிடையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
இதன் போது இரு நாடுகளுக்கு இடையேயான புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஒத்துழைப்பு, திறன் மேம்பாட்டு திட்டங்கள், தொழில்நுட்ப பரிமாற்றம், முதலீடுகள், வாய்ப்புகள் மற்றும் துறை தொடர்பான கொள்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM