(நெவில் அன்தனி)
பங்களாதேஷுக்கு எதிராக சட்டோக்ராம் விளையாட்டரங்கில் புதன்கிழமை (13) ஆரம்பமாகவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாத்தில் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் பெயிரிடப்பட்டுள்ளார்.
இடதுகை துடுப்பாட்ட வீரரும் இரண்டு கைகளாலும் பந்துவீசுபவருமான கமிந்து மெண்டிஸ் இரண்டு வருடங்களுக்குப் பின்னர் சரவ்தேச ஒருநாள் கிரிக்கெட் குழாத்தில் இடம்பெறுகின்றார்.
அண்மையில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ரி20 கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக அரைச் சதம் குவித்ததைத் தொடர்ந்து துடுப்பாட்ட வரிசையில் 3ஆம் இலக்கத்தில் பங்களாதேஷுக்கு எதிரான ரி20 தொடரில் விளையாடியிருந்தார்.
கழக மட்டப் போட்டிகளில் அவர் வழமையாக 3ஆம் இலக்கத்தில் விளையாடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணியில் கமிந்து மெண்டிஸ் போன்ற சகலதுறை வீரர் இடம்பெறுவது அணிக்கு அனுகூலமாக அமையும் என அண்மையில் தெரிவுக் குழுத் தலைவர் உப்புல் தரங்க தெரிவித்திருந்தார்.
இது இவ்வாறிருக்க, ஆப்கானிஸ்தானுடனான கடைசி ரி20 போட்டியின்போது உபாதைக்குள்ளாகி பங்களாதேஷுடனான ரி20 தொடரைத் தவறவிட்ட பெத்தும் நிஸ்ஸன்க ஒருநாள் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
அவர்களைவிட ஜனித் லியனகே, சஹான் ஆராச்சிகே, சாமிக்க கருணாரட்ன ஆகியோரும் ஒரு நாள் கிரிக்கெட் குழாத்தில் பெயரிட்பட்டுள்ளார்.
பங்களாதேஷுக்கு எதிராக ரி20 தொடரில் இலங்கை குழாத்தில் இடம்பெற்ற ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானக்க, நிரோஷன் திக்வெல்ல, பினுர பெர்னாண்டோ, நுவன் துஷார, ஜெப்றி வேண்டசே ஆகியோர் நாடு திரும்பியுள்ளனர்.
பங்களாதேஷுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாத்தில் குசல் மெண்டிஸ் (தலைவர்), சரித் அசலன்க (உதவித் தலைவர்), பெத்தும் நிஸ்ஸன்க, அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், சஹான் ஆராச்சிகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, அக்கில தனஞ்சய, சாமிக்க கருணாரட்ன, டில்ஷான் மதுஷன்க, ப்ரமோத் மதுஷான், லஹிரு குமார ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
அவர்களில் பெத்தும் நிஸ்ஸன்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, ஜனித் லியனகே கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன அல்லது அக்கில தனஞ்சய, டில்ஷான் மதுஷன்க, லஹிரு குமார ஆகியோர் முதலாவது போட்டியில் விளையாடுவர் என பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் கடந்த 37 வருடங்களில் நடைபெற்ற 54 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை 42 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. பங்களாதேஷ் 10 வெற்றிகளையே ஈட்டியுள்ளது. 2 போட்டிகளில் முடிவு கிடைக்கவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM