டிக்டொக்கினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் - முகநூல் பொதுமக்களின் எதிரி - டிரம்ப் கருத்து

Published By: Rajeeban

12 Mar, 2024 | 03:06 PM
image

டிக்டொக்  அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முகநூல் மக்களின் எதிரி என குறிப்பிட்டுள்ளார்.

டிக்டொக்கினால் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என கருதுவதாக தெரிவித்துள்ள  டொனால்ட் டிரம்ப் எனினும் இதனை தடை செய்வதை நான் ஆதரிக்கமாட்டேன் ஏன்; என்றால் அதனை தடைசெய்தால் மக்களின் எதிரியான முகநூலின்  ஆதரவு அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

சிஎன்பிசி நேர்காணலில் டிக்டொக் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானதா என்ற கேள்விக்கே  நான் அவ்வாறே நம்புகின்றேன் நாங்கள் அமெரிக்க மக்களின் அந்தரங்கள் மற்றும் தரவு உரிமைகளை பாதுகாக்கின்றோம் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என டிரம்ப் பதிலளித்துள்ளார்.

டிக்டொக் செயலியை அமெரிக்காவில் தடை செய்வதை டிரம்ப் முதலில் ஆதரித்திருந்தார்.எனினும் இதற்கான ஆதரவை தற்போது தனது முடிவை மாற்றியுள்ளார்.

ஏன் டிக்டொக்கினை தடை செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கினீர்கள் என்ற கேள்விக்கு  எனது ஆட்சிக்காலத்தில் அதனை தடைசெய்திருக்க முடியும் ஆனால்  காங்கிரஸே அதனை செய்யவேண்டும்என அவர் தெரிவித்துள்ளார்.

டிக்டொக்கினை தடை செய்வது மக்களின் எதிரி என கடுமையாக விமர்சிக்கப்படும் முகநூலிற்கான ஆதரவை அதிகரிக்கும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

டிக்டொக்கினால் நன்மைகளும் உள்ளள தீமைகளும் உள்ளன ஆனால் டிக்டொக் பிடிக்காத விடயம் என்னவென்றால் டிக்டொக்கினை இல்லாமல் செய்தால்  அது முகநூலை பெரியவிடயமாக்கிவிடும் ஏனைய ஊடகங்;கள் பலவற்றுடன் நான் முகநூலை மக்களின் எதிரியாக கருதுகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்தவாரம் சமூக ஊடகங்களில் முகநூலை  டிரம்ப் மக்களின் எதிரி என வர்ணித்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்ப் - புட்டின் பேச்சுவார்த்தை -...

2025-03-19 06:37:00
news-image

17 மணி நேர பயணம் :...

2025-03-19 04:55:50
news-image

தலைக்கு மேலே 16 போர் விமானங்கள்...

2025-03-18 17:06:54
news-image

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் இந்திய...

2025-03-18 16:47:12
news-image

கிரிமியாவை ரஸ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது...

2025-03-18 14:22:58
news-image

9 மாதங்களுக்கு பின்னர் பூமிக்கு திரும்பும்...

2025-03-18 16:29:03
news-image

அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நாக்பூரில்...

2025-03-18 12:56:05
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் ஒரு சில...

2025-03-18 12:40:45
news-image

இஸ்ரேல் காசா மீது மீண்டும் கடும்...

2025-03-18 10:46:07
news-image

தடை செய்யப்பட்ட 67 பயங்கரவாத அமைப்புகள்:...

2025-03-18 10:20:54
news-image

கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட...

2025-03-17 15:27:25
news-image

ஹமாஸிற்கு ஆதரவளித்ததால் விசா ரத்து: அமெரிக்காவில்...

2025-03-17 13:09:43