முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ பாரிய  ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சமுகமளிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருகைத்தர முடியாது என அவரது சட்டத்தரணியின் மூலமாக ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் 24 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலமளிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கை ரூபவாஹினி ஒளிபரப்பு கூட்டத்தாபனத்தில் விளம்பரங்கள் ஒளிபரப்பியதில் ஏற்பட்டுள்ள மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே இவர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆஜராகியுள்ளார்.