வெறுமனே பெண்கள் சிலரை சேர்த்துக்கொண்ட இயக்கமல்ல இது. கலந்துரையாடல்களை மேற்கொண்டு, ஆய்வுகளை மேற்கொண்டு பெண்களின் தலைமைத்துவத்திற்கான விசேட மேடையொன்றினை ஒவ்வொருவரையும் சேர்த்துக்கொண்டு அமைக்கிறோம். இது பெரும்போக்கினை மாற்றியமைத்து அனைவருடனும் கூட்டாக செல்கின்ற பயணமாகும் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட மகளிர் மாநாடு அண்மையில் ஹோமாகமையில் இடம்பெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஹரினி அமரசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய ஹரினி அமரசூரிய மேலும் தெரிவிக்கையில்,
பெண்களாகிய நாங்கள் ஒரே மூச்சில் திசைகாட்டிக்கே மாநாட்டுக்கு தடையேற்படுத்த கொழும்பு மாவட்டத்தில் பல்வேறு தந்திரோபாயங்கள் மேற்கொள்ளப்பட்டன. மாவட்டம் முழுவதிலும் பல்வேறு பொருட்களை பகிந்தளித்துள்ளார்கள்.
சமுர்த்தி உள்ளவர்களை கூட்டத்திற்காக அழைப்பு விடுத்திருக்கிறார்கள். இவையனைத்தின் மத்தியிலும் எமது மாநாட்டினை வெற்றிகரமானதாக ஆக்கிக்கொண்டமைதான் இலங்கையின் அரசியல் மாறியுள்ளதென்பதற்கான மிகச்சிறந்த சான்று.
வெறுமனே பெண்கள் சிலரை சேர்த்துக்கொண்ட இயக்கமல்ல இது. கலந்துரையாடல்களை மேற்கொண்டு, ஆய்வுகளை மேற்கொண்டு பெண்களின் தலைமைத்துவத்திற்கான விசேட மேடையொன்றினை ஒவ்வொருவரையும் சேர்த்துக்கொண்டு அமைக்கிறோம். இது பெரும்போக்கினை மாற்றியமைத்து அனைவருடனும் கூட்டாக செல்கின்ற பயணமாகும்.
பாராளுமன்றத்தை உள்ளிட்ட மக்கள் நிறுவனங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை எண்களால் அதிகரிப்பது எமது அடிப்படை நோக்கமல்ல. பாரதூரமான சமூக மாற்றமொன்றை மேற்கொண்டு அனைத்துத் துறைகளிலும் அழுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது எமது அடிப்படை நோக்கமாகும்.
துன்பங்களை பராமரித்து வருகின்ற கட்டமைப்புகளை மாற்றியமைப்பதே எமது அரசியலாகும். துன்பங்களால் பிரதானமாக பாதிக்கப்பட்டவர்களான பெண்களாகிய நாங்கள் விழிப்புணர்வுடையவர்களாக இடையீடு செய்து இந்த முறைமையை மாற்றியமைப்பதற்கான உரிமை இருக்கின்றது.
அனைத்து துறைகளையும் பரிசீலனைசெய்து விரிவானதும் ஆழமானதுமான மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது பெண்கள் சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த மாற்றத்தை ஏற்படுத்த எமக்கு அதிகாரம் அவசியமாகும். இந்த ஆழமான மாற்றத்திற்காக செயலாற்றுகின்ற எமக்கு எதிராக உள்ள அனைவரையும் தோற்கடிக்கின்ற வருடமாக அமைவதாலே 2024 ஆம் ஆண்டு எமக்கு தீர்வுக்கட்டமானதாக அமைகிறது.
இனிமேலும் பெண்களாகிய நாங்கள் ஏமாறத் தயாரில்லை. எமது இயக்கத்தின் வெற்றி காரணமாக ஏனைய அரசியல் கட்சிகளும் பெண்களைப்பற்றி சிந்திக்கத் தொடங்கி உள்ளனவெனில் நாங்கள் அதற்காக மகிழ்ச்சி அடைகிறோம். எமக்கு இது ஒரு தேர்தல் உபாயமார்க்கம் மாத்திரமல்ல.
அழுத்தத்தை எதிர்த்துநின்று, நிலவுகின்ற முறைமையை மாற்றியமைப்பதை முன்னெடுத்து வருகையில் தற்போது ஒட்டுமொத்த பெண்களையும் குறிவைத்து சேறுபூசத் தொடங்கி இருக்கிறார்கள்.
இதற்கு முன்னரும் தலைவிகளை இலக்குவைத்து புரிந்த தாக்குதல்களும் குறைகூறல்களும் பல்வேறு வழிமுறைகள் ஊடாக அமுலாக்கப்பட்டுள்ளன.
சதாகாலமும் இந்த உலகிற்கு புதிய உயிரினங்களை உருவாக்குவது பெண்களாகிய நாங்கள்தான். அந்த புதிய உயிர்களைப் பேணிப்பாதுகாப்பதும் நாங்கள்தான். இந்த புதிய உலகத்தை நிர்மாணிப்பது போன்றே அந்த புதிய உலகத்தை பாதுகாத்திட பெண்களாகிய நாங்கள் மென்மேலும் வலிமையுடன் ஒன்றுசேர்வோம் என்று மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM