பூகம்பம் போல உணர்ந்தோம் - நடுவானில் தொழில்நுட்ப கோளாறினால் தடுமாறிய லட்டம் விமானத்தின் பயணிகள் தெரிவிப்பு

Published By: Rajeeban

12 Mar, 2024 | 11:55 AM
image

சிட்னியிலிருந்து அவுக்லாண்டிற்கு சென்றுகொண்டிருந்த லட்டாம் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து விமானத்திற்குள் காணப்பட்ட நிலைமை குறித்து தெரிவித்துள்ள பயணிகள் பூகம்பம் போல உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

திங்கட்கிழமை பகல் 263 பயணிகள் மற்றும் ஒன்பது விமானப்பணியாளர்களுடன் நியுசிலாந்தின் அவுக்லாண்டை நோக்கி  புறப்பட்ட லட்டாம் எயர்லைன்ஸ் தனது மூன்றரை மணிநேர பயணத்தின் இடையில் கடுமையான குலுங்கியது என்பது விமான கண்காணிப்பு தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

தொழில்நுட்ப கோளாரே இதற்கு காரணம் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன என தெரிவித்துள்ள லட்டாம் எயர்லைன்ஸ் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது.

விமானம் நியுசிலாந்தில் தரையிறங்கியதும் விமானி கடும் அதிர்ச்சியில் சிக்குண்டிருந்தார் என பயணிகள் தெரிவித்துள்ளனர்.

சிறிதுநேரம் விமானத்தை செலுத்தும் திறன் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார் எனவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

விமானம் ஒரு செகன்ட் கீழே விழத்தொடங்கியது  என பயணிகள் தெரிவித்துள்ளனர்.

மதிய உணவு வழங்குவது  முடிவடைந்து சில நிமிடங்களின் பின்னர் விமானம் கீழே விழத்தொடங்கியது என நியுசிலாந்தை சேர்ந்த பயணியொருவர் தெரிவித்துள்ளார்.

அவ்வேளையே தான் தனது ஆசனப்பட்டியை அணிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு செகன்டில் இது இடம்பெற்றது அதுமிகவும் வேகமான விதத்தில் குலுங்க தொடங்கியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விமானம் மிகவும் அமைதியான முறையில் பயணித்துக்கொண்டிருந்தது விமானிகள் எச்சரிக்காமலே இது இடம்பெற்றது எல்வூட் தெரிவித்துள்ளார்.

அது மிகவும் வேதனையான அனுபவம் பயணிகள் மற்றும் விமானப்பணியாளர்கள் காயமடைந்தனர் இரத்தம் வெளியேறியது ஏனையவர்கள் அதிர்ச்சியில் சிக்குண்டிருந்தனர் எனவும் எல்வூட் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து நியுசிலாந்தின் அவுக்லாண்ட்டிற்கு பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

லட்டம் எயர்லைன்ஸ் விமானத்திலேயே  தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது இதனால்; விமானம் தடுமாறத்தொடங்கியது என லட்டம் எயர்லைன்ஸ்  தெரிவித்துள்ளது.

விமானம் அவுக்லாண்டில் தரையிறங்கியதும் பயணிகள் தயார் நிலையில் நின்ற அம்புலன்ஸில் அவசரஅவசரமாக ஏற்றப்பட்டனர்.

எங்கள் அம்புலன்ஸ் சேவையை சேர்ந்தவர்கள் பயணிகளை உடனடியாக மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தினர் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ஒருவர் கடுமையாக பாதி;க்கப்பட்டுள்ளார் என  ஹட்டோ ஹோன் சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.

13 பயணிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யுத்தநிறுத்த அறிவிப்பு வெளியான பின்னரும் இஸ்ரேல்...

2025-01-16 15:10:39
news-image

புற்றுநோயின் பாதிப்பிலிருந்து விடுபடத்தொடங்கியுள்ளேன்- பிரிட்டிஸ் இளவரசி

2025-01-16 14:10:11
news-image

அமெரிக்க இராஜாங்க செயலாளரை யுத்த குற்றவாளி...

2025-01-16 11:21:48
news-image

யுத்த நிறுத்த அறிவிப்பின் பின்னரும் காசாவில்...

2025-01-16 10:42:56
news-image

துயரத்துடனும் நம்பிக்கையுடனும்-காசாவில் பாலஸ்தீனியர்களிற்கு கசப்பும் இனிப்பும்...

2025-01-16 07:09:56
news-image

எனது வெற்றியே யுத்தநிறுத்தஉடன்படிக்கையை சாத்தியமாக்கியது –...

2025-01-16 00:32:44
news-image

ஆறுவார கால யுத்த நிறுத்தம் -...

2025-01-16 00:12:39
news-image

தென்னாபிரிக்க தங்க சுரங்கத்திலிருந்து 70க்கும் அதிகமான...

2025-01-15 17:13:04
news-image

ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களை விடுவிக்க...

2025-01-15 13:32:17
news-image

யுத்தநிறுத்த உடன்படிக்கையில் இஸ்ரேல் கைச்சாத்திடும் வரை...

2025-01-15 12:31:56
news-image

யுத்தநிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிலையில் இஸ்ரேல்...

2025-01-15 11:11:31
news-image

சீனாவின் ஊடக நிறுவனங்களுடன் இலங்கை அரசாங்கம்...

2025-01-15 10:41:45