ஹெய்ட்டியின் தலைநகர் வன்முறை கும்பலின் பிடியில் ; இராஜினாமாவை அறிவித்தார் சர்ச்சைக்குரிய பிரதமர்

Published By: Rajeeban

12 Mar, 2024 | 12:03 PM
image

2021 இல் ஹெய்ட்டியின் ஜனாதிபதி படுகொலைசெய்யப்பட்ட பின்னர் ஆட்சிக்கு வந்த தற்போதைய பிரதமர் நாட்டின் பாதுகாப்பின்மையை காரணம் காட்டி கடந்த வருடம் தேர்தலை நடத்த மறுத்துள்ளார்.

ஹெய்ட்டி வறுமை மற்றும் குழுவன்முறைக்குள் மேலும் சிக்குப்பட்டுள்ளதால் சீற்றமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.

-----------------

கடந்த ஒருவாரத்திற்கு மேல் வன்முறையில் சிக்குண்டுள்ள ஹெய்ட்டியின் பிரதமர். தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஹெய்ட்டியில் வன்முறை கும்பல் அரசகட்டிடங்களை தாக்கிவருவதன் காரணமாக சமூக அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன் ஹெய்ட்டி வீழ்ச்சியடையும் நிலையில் காணப்படுகின்ற ஒரு சூழலில் பிரதமரின்  ராஜினாமா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரதமரின் ஆலோசகர் இதனை உறுதி செய்துள்ளதுடன் புதியபிரதமர் பதவியேற்க்கும்  வரை தற்போதைய ஜனாதிபதி பதவியில் நீடிப்பார் என தெரிவித்துள்ளார்.

நிலைமாற்றுக்கால ஜனாதிபதி பேரவை அறிவிக்கப்பட்டு இடைக்கால பிரதமர் குறித்த அறிவிப்பு வெளியானதும் ஹெய்ட்டி பிரதமர் பதவியை இராஜினாமா செய்வார்  என கயானாவின் தலைவரும் கரிபீயன் சமூகம் மற்றும் பொதுவான சந்தைக்கான அமைப்பின் தலைவருமான இர்பான் அலி தெரிவித்துள்ளார்.

நாட்டில் தேர்தலை நடத்துவதற்காக நிலைமாற்றுக்கால பேரவை  ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்  அந்த கரீபியன் சமூகம் மற்றும் பொதுவான சந்தைக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

அமைதியான அதிகார மாற்றத்திற்கான நிலைமாற்றுக்கால ஆட்சி ஏற்பாடு குறித்து நாங்கள் உறுதியாகயிருக்கின்றோம் என கரீபியன் அமைப்பு தெரிவித்துள்ளது.

2021 இல் ஹெய்ட்டியின் ஜனாதிபதி படுகொலைசெய்யப்பட்ட பின்னர் ஆட்சிக்கு வந்த தற்போதைய பிரதமர் நாட்டின் பாதுகாப்பின்மையை காரணம் காட்டி கடந்த வருடம் தேர்தலை நடத்த மறுத்துள்ளார்.

ஹெய்ட்டி வறுமை மற்றும் குழுவன்முறைக்குள் மேலும் சிக்குப்பட்டுள்ளதால் சீற்றமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.

ஹெய்டியின் பாதுகாப்பின் மீதான கட்டுப்பாட்டை தான் இழந்துள்ளதால் 1000 கென்யா பொலிஸ் உத்தியோகத்தர்களை ஹெய்ட்டிக்கு வரவழைப்பதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக ஹெய்ட்டி பிரதமர் கென்யா சென்றிருந்த தருணத்தில் கடந்த வாரம் தலைநகரில் வன்முறைகள் வெடித்தன.

நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஆயுத கும்பல் ஒன்று சட்ட அமுலாக்கல் மற்றும் அரச கட்டிடங்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டது.

இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

கடந்த வாரம் ஆயுத குழுக்கள் ஹெய்ட்டியின் மிகப்பெரிய சிறைமீது தாக்குதல் நடத்தி 3500 க்கும் அதிகமான கைதிகளை விடுதலை செய்ததை தொடர்ந்து அரசாங்கம் தலைநகரில் அவசரநிலையை பிரகடனம் செய்திருந்தது.

சிறைச்சாலை மீதான தாக்குதலிற்கு உரிமை கோரிய வன்முறை கும்பல் ஒன்றின் தலைவர் ஹென்றி அரசாங்கத்தை பதவிகவிழ்ப்பதற்காகவே இந்த வன்முறை என தெரிவித்துள்ளார்.

ஏரியல் ஹென்றி பதவி விலகாவிட்டால் அவருக்கு சர்வதேச சமூகம் தொடர்ந்து ஆதரவு வழங்கினால் அவர்கள் எங்களை உள்நாட்டு யுத்தம் இனப்படுகொலையை நோக்கி கொண்டுசெல்வார்கள் வன்முறை கும்பலின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஹெய்ட்டி தலைநகர் தற்போது பெருமளவிற்கு வன்முறை கும்பலின் பிடியில் காணப்படுகின்றது என தெரிவித்துள்ள ஐநா ஏனைய பகுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் முயற்சிகளில் வன்முறை கும்பல்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஹென்றி வெளிநாட்டில் இருந்த காலப்பகுதியில் சர்வதேச விமானநிலையத்தை முற்றுகையிட்டுள்ள வன்முறை கும்பல்  பிரதமர் நாட்டிற்கு திரும்புவதை தடுத்துள்ளது.

இந்த குழப்பநிலை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்த குழப்பநிலை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.இதுவரை வன்முறைகள் காரணமாக 300000க்கும் அதிகமான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

ஹெய்ட்டியில் வன்முறைகள் தீவிரமடைந்துள்ள அதேவேளை அரசியல் வன்முறையும் வரட்சியும் தீவிரமடைந்;துள்ளதால் சுமார் 5.5 மில்லியன் மக்களிற்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

படகுடன் மகனை விழுங்கிய திமிங்கிலம் -...

2025-02-14 17:35:40
news-image

உடல்நலப்பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி

2025-02-14 16:24:16
news-image

புட்டினுடன் டிரம்ப் தொலைபேசி உரையாடல் -...

2025-02-14 15:11:08
news-image

செர்னோபில் அணுஉலையை ரஸ்ய ஆளில்லா விமானம்...

2025-02-14 14:31:15
news-image

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னரும் ஜேர்மனி நாடு...

2025-02-14 13:13:29
news-image

உக்ரைன் யுத்தம் குறித்து இன்று முக்கிய...

2025-02-14 12:22:29
news-image

ட்ரம்பை சந்தித்த இந்திய பிரதமர் .....

2025-02-14 11:07:20
news-image

ஜேர்மனியில் பொதுமக்கள் மீது காரால் மோதிய...

2025-02-14 07:41:47
news-image

தாய்வானில் வணிக வளாகத்தில் வெடிப்பு சம்பவம்...

2025-02-13 15:32:35
news-image

ஆப்கான் தலைநகரில் ஒரே வாரத்தில் இரண்டாவது...

2025-02-13 14:24:17
news-image

உக்ரைன் குறித்த அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம்?

2025-02-13 12:40:09
news-image

இந்திய பிரதமர் மோடி - சுந்தர்...

2025-02-12 15:33:51