சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள் வங்கி

12 Mar, 2024 | 11:20 AM
image

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மக்கள் வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கொண்டாட்டம் கொழும்பு 02, மக்கள் வங்கியின் தலைமையகக் கிளையில் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி ,பொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

மக்கள் வங்கி இந்த ஆண்டு மகளிர் தினத்தை “உலகத்தை வென்ற பெருமை இவள்" என்ற தொனிப்பொருளில் கொண்டாடியது. 

பெண்களின் தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில், இலங்கையில் உள்ள சிறு தொழில்களை உயர் தரத்திற்கு கொண்டு செல்வதற்கு ஆதரவளிக்கும் நிறுவனமான Good Market நிறுவனத்துடன் இணைந்து 12 பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்வில் அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, வாய்ப்புக்களைத் தோற்றுவிப்பதற்கு இடமளிக்கப்பட்டது.

மேலும் இங்கு கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, மகப்பேற்றியல் மற்றும் பெண்ணியல் வைத்திய நிபுணர் வைத்தியர் சகுந்தலா செனவிரத்ன, சிரேஷ்ட அழகுக்கலை நிபுணர் நயனா கருணாரத்ன,  Good Market இன் இணை ஸ்தாபகர் அச்சலா சமரதிவாகர, மஹாராஜா நிர்வாக முகாமைத்துவ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, மகாராஜா இன்ஸ்டிடியூட் , மனேஜ்மென்ட் பிரதம நிறைவேற்று அதிகாரி, மகாராஜா டலன்ட் மனேஜ்மென்ட் பணிப்பாளர், சிரேஷ்ட ஊடகவியலாளர் சேதனா லியனகே ஆகியோருக்கு, இந்நாட்டின் அபிவிருத்திக்காக அவர்களுக்காக ஆற்றிய பணியைப் பாராட்டி விசேட விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இது தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வனிதா வாசனா Money Planner முதலீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டு, ஒன்லைன் மூலம் கடன் பெறும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. பீப்பிள்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விசேட கடன் காப்புறுதி முறையும் இந்த நாளில் ஆரம்பிக்கப்பட்டது.

பெண் தொழில்முனைவோரின் தயாரிப்புகள் அடங்கிய வர்த்தக கண்காட்சியும் ஒரே நேரத்தில் நடைபெற்றது.

இதன்போது,  பீப்பிள்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திருமதி ஜீவனி காரியவசம், மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் (தனிநபர் வங்கிச்சேவை) ரி.எம்.டபிள்யூ. சந்திரகுமார உட்பட பல நிறுவன மற்றும் நிர்வாக முகாமைத்துவ அதிகாரிகள், தொழில்முனைவோர், தொழில் வல்லுநர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர். இதேவேளை நாடளாவிய ரீதியில் உள்ள மக்கள் வங்கிக் கிளைகளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டெல்மேஜ் ஹெல்த்கெயார் மூலம் பல் உட்பொருத்தல்...

2024-06-13 18:52:47
news-image

பூமிக்கு 2,000 மரங்கள் : உலக...

2024-06-13 15:53:57
news-image

கூட்டு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்பு...

2024-06-10 17:55:53
news-image

பான் ஏசியா வங்கியுடன் இலங்கையின் தேசிய...

2024-06-04 11:51:48
news-image

Uber Springboard: இலங்கையில் வழிகாட்டல் திட்டத்துடன்...

2024-06-03 16:42:48
news-image

ராணி சந்தனத்திடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு தங்கப் பவுண்கள்

2024-06-03 16:53:26
news-image

LMD இன் மிகவும் விரும்பப்படும் தயாரிப்பு...

2024-06-03 17:13:46
news-image

அளவுத்திருத்த சிறப்பின் ரகசியங்களை திறப்பதற்கான நுழைவாயில்...

2024-05-30 17:29:08
news-image

சுங்கத் திணைக்களத்தினால் அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனம்...

2024-05-21 17:20:25
news-image

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் 'மிகவும்...

2024-05-20 17:37:24
news-image

"IT Gallery - Hikvision Partner...

2024-05-20 17:31:03
news-image

உள்ளடக்க மேம்பாட்டுப் பட்டறையுடன் முன்னோக்கிச் செல்லும்...

2024-05-20 17:33:11