தமிழ், முஸ்லிம் சமூ­கங்­களில் தாக்கம் செலுத்தும் விட­யங்­க­ளான வடக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்தை அகற்­றுதல், காணா­மல்­போனோர் விவ­காரம், காணி விடு­விப்பு, அர­சியல் கைதிகள் விவ­கா­ரங்­களை அர­சாங்கம் உட­ன­டி­யாக ஆராய்ந்து கவனம் செலுத்தி தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும். இல்­லா­விடின்  நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தியில் பெற்­றெ­டுக்­கப்­பட்ட  தற்­போ­தைய சந்­தர்ப்­பத்தை இழக்க வேண்­டிய அபாயம் ஏற்­படும் என்று சிறு­பான்மை மக்கள் தொடர்­பாக ஆராயும் ஐக்­கிய நாடுகள் சபையின் விசேட நிபுணர் றீட்டா ஐசாக் நாடியா தெரி­வித்தார்.

அத்­துடன் அர­சாங்கம் இலங்­கையின் சிறு­பான்மை மக்­களை பாது­காப்­ப­தற்­கான உட­ன­டி­யான மிக முக்­கி­ய­மான வலு­வான வேலைத்­திட்­டங்­களை முன்­வைப்­பதில்   தனது அர்ப்­ப­ணிப்பை வெ ளிக்­காட்ட வேண்டும் எனவும் ஐசாக் நாடியா சுட்­டிக்­காட்­டினார்.

ஜெனி­வாவில் நடை­பெற்று வரு­கின்ற ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடரின் நேற்­றைய அமர்வில் இலங்கை தொடர்­பான அறிக்­கையை சமர்ப்­பித்து உரை­யாற்­றிய றீட்டா ஐசாக் நாடியா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்,

இலங்­கைக்கு நான் 2016 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 10 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை விஜ­யத்தை மேற்­கொண்டேன். இதன்­போது இலங்கை அர­சாங்கம் எனக்கு பெற்­றுக்­கொ­டுத்த வச­தி­க­ளுக்கு நன்றி தெரி­விக்­கின்றேன். 2015 ஆம்  ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட தேசிய நல்­லாட்சி அரா­சாங்கம் பாரிய எதிர்­பார்ப்புஇ இலக்கு என்­ப­வற்றை அர­சி­ய­ல­மைப்பு மற்றும் அரச மறு­சீ­ர­மைப்பில் வெளிக்­காட்­டி­யுள்­ளது. 

யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான நாட்டில் அமை­தி­யான சக­வாழ்வை அடை­வ­தற்கு நன்கு திட்­ட­மி­டப்­பட்ட ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட உண்­மையைக் கண்­ட­றிதல் நல்­லி­ணக்கம் காயங்­களை ஆற்­றுதல் மற்றும் பொறுப்­புக்­கூறல் செயற்­பாடு அவ­சி­ய­மா­கின்­றது. இந்த இலக்­கு­களை ஒரே இரவில் அடை­ய­மு­டி­யாது எனினும் ஒரு விட­யத்தை இங்கு கூற­வேண்டும். நான் இலங்­கைக்கு சென்று வந்­ததன் பின்னர் இன்றும் கூட அங்கு நிலைமை மோச­மா­கவே காணப்­ப­டு­கி­றது. 

 குற்­ற­மி­ழைத்­த­வர்­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­ப­டாத நிலைமை தொடர்­கின்­றது. இது சமூ­கங்­க­ளுக்கு மத்­தியில் நம்­பிக்கை பற்­றாக்­கு­றையை அதி­க­ரித்­துள்­ளது. குறிப்­பாக இன, மத, மொழி ரீதி­யான பிரி­வு­களை நான் கண்டேன். 

தமிழ்இ முஸ்லிம்இ இந்­தியத் தமி­ழர்கள் மற்றும் சிறு அள­வி­லான சிறு­பான்மை மக்கள் திட்­ட­மி­டப்­பட்ட சமூக மற்றும் அர­சியல் ஓரங்­கட்­டு­த­லுக்கு உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளனர். விசே­ட­மாக சிறு­பான்மைப் பெண்கள் உண்­மைக்கும் நல்­லி­ணக்­கத்­துக்­கா­கவும் போராடிக் கொண்­டி­ருக்­கின்­றனர். நான் இலங்­கைக்கு சென்று ஐந்து மாதங்கள் கடந்து விட்­டன. அர­சாங்கம் இலங்­கையின் சிறு­பான்மை மக்­களை பாது­காப்­ப­தற்­கான உட­ன­டி­யான மிக முக்­கி­ய­மான வலு­வான வேலைத் திட்­டங்­களை முன்­வைப்­பதில் தனது அர்ப்­ப­ணிப்பை வெ ளிக்­காட்ட வேண்டும் என்று அன்று  வலி­யு­றுத்­தினேன். அந்தச் செய்­தியை மீண்டும் இன்று  வலி­யு­றுத்­து­கின்றேன். 

அதா­வது தமிழ்இ முஸ்லிம் சமூ­கங்­களில் தாக்கம் செலுத்தும் விட­யங்­ளான  வடக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்தை அகற்­றுதல், காணா­மல்­போனோர் விவ­காரம், காணி விடு­விப்பு, அர­சியல் கைதிகள் விவ­கா­ரங்­களை அர­சாங்கம் உட­ன­டி­யாக ஆராய்ந்து தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும். இல்­லா­விடின் நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தியில் பெற்­றெ­டுக்­கப்­பட்ட  தற்­போ­தைய சந்­தர்ப்­பத்தை இழக்க வேண்­டிய அபாயம் ஏற்­படும் என்­பதை இங்கு தெரி­வித்துக் கொள்­கின்றேன். 

அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பு செயற்­பா­டுகள் மற்றும் நிலை­மாறு கால நீதி நட­வ­டிக்­கைகள் இலங்­கைக்கு எப்­போதும் இல்­லா­த­வா­றான ஒரு சந்­தர்ப்­பத்தை கடந்­த­கால நிலை­மை­களை ஆரா­யவும் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­பவும் வழங்­கி­யி­ருக்­கி­றன. குறிப்­பாக அனைத்து இலங்­கை­யர்­களும் தாங்கள் இலங்­கை­யர்கள் என்ற அடை­யா­ளத்தை உரு­வாக்­கு­வ­தற்கும் வலுப்­ப­டுத்­து­வ­தற்கும் சிறந்த சந்­தர்ப்பம் கிடைத்­தி­ருக்­கி­றது. 

எந்­த­வொரு சமூ­கத்­திற்கும் அநீதி ஏற்­ப­டாத வகையில் சமத்­துவம் நிறு­வன ரீதி­யா­கவும் சட்­ட­ரீ­தி­யா­கவும் உறு­திப்­ப­டுத்த வேண்டும். சிறு­பான்மை மக்­களை  பாதுகாப்பானவர்களாக உணர வைப்பது சமூகங்களுக்கிடையிலான பதற்றத்தை தணிக்க கருவியாக இருப்பதுடன் நல்லாட்சியினதும் சிறந்ததொரு அத்தியாவசிய காரணியாக அமையும். 

எனவே தேசிய நல்லிணக்கத்தை அடைவதற்காக நான் முன்வைத்த பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் தெ ளிவான குறிக்கோளுடனும் சிறந்த கட்டமைப்புடனும் கால அட்டவணையுடனும் அமுல்படுத்தும் என எதிர்பார்க்கின்றேன். விசேடாக சிறுபான்மை மக்களை பாதுகாப்பதற்கான ஆணைக்குழு ஒன்றை இலங்கை அரசாங்கம் உருவாக்கும் என நம்புகின்றேன்.