(நெவில் அன்தனி)
கிறைஸ்ட்சேர்ச், ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் மூன்றரை நாட்களில் நிறைவுக்கு வந்த, ஆனால் பரபரப்பை ஏற்படுத்திய அவுஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்களால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா தொடரை 2 - 0 என முழுமையாகக் கைப்பற்றியது.
போட்டியில் 279 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை மூன்றாம் நாள் பிற்பகல் ஆரம்பித்த அவுஸ்திரேலியா அன்றைய தினம் 4 முக்கிய விக்கெட்களை இழந்து 77 ஓட்டங்களைப் பெற்று இக்கட்டான நிலையில் இருந்தது.
இதன் காரணமாக எந்த அணியும் வெற்றிபெறலாம் என்ற நிலை நான்காம் நாள் ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தது.
தனது இரண்டாவது இன்னிங்ஸை நான்காம் நாளான திங்கட்கிழமை (09) காலை தொடர்ந்த அவுஸ்திரேலியா, ட்ரவிஸ் ஹெட்டின் விக்கெட்டை 2ஆவது ஓவரில் இழந்து மேலும் சிக்லை எதிர்கொண்டது.
ஆனால், மிச்செல் மாஷ், அலெக்ஸ் கேரி ஆகிய இருவரும் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 140 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினர்.
மிச்செல் மாஷ் 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 80 ஓட்டங்களைப் பெற்றார். (220 - 6 விக்.)
அதே மொத்த எண்ணிக்கையில் மிச்செல் ஸ்டாக் களம் விட்டகன்றார்.
எனினும் அலெக்ஸ் கேரியும் அணித் தலைவர் பெட் கமின்ஸும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் 61 ஒட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவின் வெற்றியை உறுதிசெய்தனர்.
அலெக்ஸ் கேரி 15 பவுண்டறிகள் உட்பட 98 ஓட்டங்களுடனும் பெட் கமின்ஸ் 4 பவுண்டறிகள் உட்பட 32 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
இந்தப் போட்டியில் நியூஸிலாந்து அதன் இரண்டாவது இன்னிங்ஸில் பெற்ற 372 ஓட்டங்களே அதிகூடிய இன்னிங்ஸ் எண்ணிக்கையாக இருந்தது.
மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டம் இழக்காமல் அரைச் சதம் குவித்த அலெக்ஸ் கேரி, விக்கெட் காப்பாளராக 10 பிடிகளை எடுத்து ஆட்ட நாயகன் விருதை தனதாக்கிக்கொண்டார்.
இரண்டு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் நியூஸிலாந்தின் மெட் ஹென்றி 101 ஓட்டங்களைப் பெற்றதுடன் 17 விக்கெட்களை வீழ்த்தி தொடர் நாயகன் ஆனார்.
இந்த டெஸ்ட் போட்டி முடிவுடன் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷப் அணிகள் நிலையில இந்தியா தொடர்ந்தும் முதலிடத்தில் இருப்பதுடன் அவுஸ்திரேலியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
எண்ணிக்கை சுருக்கம்
நியூஸிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 162 (டொம் லெதம் 38, மெட் ஹென்றி 29, டிம் சௌதீ 26, ஜொஷ் ஹேஹ்ல்வூட் 31 - 5 விக்., மிச்செல் ஸ்டாக் 59 - 3 விக்.)
அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 256 (மானுஸ் லபுஷேன் 90, மிச்செல் ஸ்டாக் 28, கெமரன் க்றீன் 25, மெட் ஹென்றி 67 - 7 விக்.)
நியூஸிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 372 (ரச்சின் ரவிந்த்ரா 82, டொம் லெதம் 73, டெரில் மிச்செல் 58, கேன் வில்லியம்சன் 51, ஸ்கொட் குகெலீன் 44, பெட் கமின்ஸ் 62 - 4 விக்., நேதன் லயன் 49 - 3 விக்.)
அவுஸ்திரேலியா 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 279 ஓட்டங்கள்) 281 - 7 விக். (அலெக்ஸ் கேரி 98 ஆ.இ., மிச்செல் மாஷ் 80, பெட் கமின்ஸ் 32 ஆஷ.இ., பென் சியஸ் 90 - 4 விக்., மெட் ஹென்றி 94 - 2 விக்.)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM