நானுஓயா, கர்னட் தோட்டப்பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக 21  வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் வசித்துவந்த 109 பேர் அகற்றப்பட்டு, வேறு ஒரு இடத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதுவேளை நிலவிவரும் சீரற்ற காலநிலையில், மாரும் சாத்தியப்பாடுகள் இருப்பதாகவும், எனினும் இன்று பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு மேல் இடியுடன் கூடிய மழை பெய்யுமென காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.