மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கீச்சான்பள்ளம் கிராமத்தில், நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. 

கீச்சான்பள்ளம் பிரதேசத்திலுள்ள காணியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த போது குறித்த கைகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவிதுள்ளனர்.  

மேலும் குறித்த விடயம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸாருக்க அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்றுள்ள பொலிஸார் 4 கைகுண்டுகளை மீட்டுள்ளனர்.  

இந்நிலையில் நான்கு கைக்குண்டுகளும் பொலித்தீன் பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், இவ்விடயம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.