பம்பலப்பிட்டியில் தொடர் மாடி வீடமைப்புத் திட்டத்தை நிர்மாணிக்கவுள்ள முதலீட்டாளர்  ஆறு வார காலப்பகுதிக்குள் இலங்கைக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொண்டுவரவேண்டும் என அமைச்சரவையின் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

 

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. 

அதில் கலந்துகொண்டு அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

பம்பலப்பிட்டியில் தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்தை   முன்னெடுக்கவுள்ள  முதலீட்டாளர்  எதிர்வரும்  ஆறு வாரங்களுக்குள் இலங்கைக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொண்டுவரவேண்டும். 

இந்த நிபந்தனைகளை அந்த முதலீட்டாளருக்கும் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்குமிடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.  இது தொடர்பில்  வீடமைப்பு அமைச்சர்  சஜித் பிரேமதாச கொண்டுவந்த  அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

அந்த வகையில் உடன்படிக்கை  கைச்சாத்திடப்பட்டு நான்கு முதல் ஆறு வாரங்களுக்குள் முதலீட்டாளர்   10 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.