ஸ்மார்ட் கல்வியை வலுப்படுத்தும் பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறை வழங்கும் வேலைத்திட்டத்தையும், பிரபஞ்சம் பாடசாலை பஸ் வழங்கும் வேலைத்திட்டத்தையும் பொறாமை காழ்புணர்வு காரணமாக நிறுத்த முயல்பவர்கள் முயற்சித்து வருகின்றனர். இந்த பிரபஞ்சம் திட்டத்தை தடை செய்வது என்பது நாட்டின் பாடசாலை முறையை சீர்குலைப்பதான செயல் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பாடசாலைகள் மேம்படும்போது சிறைச்சாலைகள் மூடப்படும் என்று கூறப்படுவதால், இந்நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் கல்வி கற்கும் 41 இலட்சம் மாணவர் தலைமுறை இதன் மூலம் பயன்பெற்று வலுவடைந்து வருகிறது.எனவே இவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு குழிபறிக்கக் கூடாது. இந்த வேலைத்திட்டங்களை தடைசெய்யும் எண்ணம் இருந்தால் அது பாடசாலையை முடக்கி மேலும் பல சிறைச்சாலைகளை உருவாக்கும் செயலாக கருத வேண்டியுள்ளாத எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பிரபஞ்சம் பஸ் வழங்கும் வேலைத்திட்டத்தின் 84 ஆவது கட்டமாக, திருகோணமலை கிண்ணியா மத்திய கல்லூரிக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான பஸ் வழங்கும் நிகழ்வில் ஞாயிற்றுக்கிழமை (10) கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
எந்த தரப்பினருக்கும் சிறைச்சாலைகளை உருவாக்க வேண்டிய தேவையில்லை. இத்திட்டங்கள் மூலம் ஸ்மார்ட் மாணவனும் ஸ்மார்ட் நாடுமே கட்டமைக்கப்படுகிறது. எவ்வாறான சவால்கள் வந்தாலும் இந்த வேலைத்திட்டத்தை நிறுத்த மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டில் பாதி பேர் ஏழ்மையில்!
நாட்டில் வறுமை அதிகரித்துள்ளது. இத்தருணத்தில் நாட்டின் பாதி பேர் ஏழ்மை நிலையை அடைந்துள்ளனர், இந்த வறுமையை ஒழிப்பதற்கான முக்கிய திட்டங்களில் ஒன்றாக ஸ்மார்ட் கல்வியை கருத முடியும். கல்வியை வலுப்படுத்துவதன் மூலமும், அறிவை மேம்படுத்துவதன் மூலமும், சிறந்த கல்வியின் ஊடாக கூடிய வருமானம் ஈட்டும் வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் உருவாக்கி ஏழ்மையை ஒழிக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பெண்களுக்கான சுகாதார வசதிகள் இலவசமாக வழங்கப்படும்
யுவதிகள் பெண்களுக்கு அவர்களுக்குத் தேவையான சுகாதார வசதிகள் இலவச வழங்கப்படும். இதன் மூலம் சிறுநீரக தொற்று மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை இல்லாதொழிக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM