கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடந்த 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சுண்டிக்குளம் சாலை கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின் போது சட்டவிரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட 5 டிங்கி படகுகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக கடற்படையினர் தீவைச் சுற்றியுள்ள கரையோர மற்றும் கடற்பரப்புகளில் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இந்த முயற்சிகளின் விரிவாக்கமாக, வடக்கு கடற்படை கட்டளையகத்தின் வெற்றிலைக்கேணி கடற்படையினர், சாலை கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 டிங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி சாதனங்களுடன் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 45 வயதுக்கு உட்பட்ட முல்லைத்தீவு, வெள்ளன்பாலம் மற்றும் புதுமாத்தளன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர்கள்மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM