நாவலப்பிட்டி புகையிரத நிலைய சேவையாளர்கள் தங்களது கடமையை நிறைவேற்றியுள்ளார்கள் ; பந்துல

10 Mar, 2024 | 10:08 PM
image

(இராஜதுரை ஹஷான்)

புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான காணியில் 10 ஆண்டுகளுக்கு குறைவான காலப்பகுதியில் வசிப்பவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும். 10 வருடங்களுக்கு மேல் வசிப்பவர்களிடமிருந்து காணி வரி அறவிடப்படும் என போக்குவரத்து, ஊடகத்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் அந்த புகையிரத நிலையத்தின் சேவையாளர்கள் மீது தவறேதும் கிடையாது. அவர்கள் தங்களின் அடிப்படை கடமையை நிறைவேற்றியுள்ளார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  

நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் வணிக உப காரியாலயத்தை திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கை புகையிரத வரலாற்றை மாற்றியமைக்கும் தருணத்தில் தற்போது உள்ளோம். புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான காணியில் சட்டவிரோதமான முறையில் 10 வருடங்களுக்கு அதிகமான காலப்பகுதியில் வாழ்பவர்களுக்கு காணி வரி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான காணியில் வாழ்பவர்கள் அந்த காணிகளில் விவசாயம், கைத்தொழில் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இவர்கள் புகையிரத திணைக்களத்துக்கு வரி செலுத்துவதில்லை. ஆகவே இவர்களிடமிருந்து காணி வரி முறையாக அறவிடப்படும்.இந்த காணிகள் அவர்களுக்கு ஒருபோதும் சொந்தமாக வழங்கப்பட மாட்டாது. நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கப்படும்.

புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான காணியில் சட்டவிரோதமான முறையில் 10 வருடங்களுக்கு குறைவான காலப்பகுதியில் வாழ்பவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும். ஆகவே இவ்வாறானவர்கள் புகையிரத திணைக்களத்துக்கு வருகை தந்து மதிப்பீடு தொடர்பில் மேன்முறையீடு செய்துக் கொள்ள வேண்டும். 

நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணை முன்னெடுக்கப்பட்டு அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நாவலப்பிட்டி புகையிரத நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சேவையாளர்கள் மீது தவறேதும் கிடையாது.

மதுபோதையில் புகையிரதத்தில் பயணித்த இந்த சுற்றுலா பயணிகள் புகையிரத சேவைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் முறையற்ற வகையில்  செயற்பட்டுள்ளார்கள். இதன்போது ஏனைய பயணிகளின் நலனை கருத்திற் கொண்டு அவர்கள் புகையிரதத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஆகவே நாவலப்பிட்டி புகையிரத நிலைய சேவையாளர்கள் தமது அடிப்படை கடமையை நிறைவேற்றியுள்ளார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டுக்குள் மீண்டும் இனவாதத்தை தூண்ட வேண்டாம்...

2026-01-18 19:21:04
news-image

கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் 21ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பில்...

2026-01-18 17:25:12
news-image

“வாழ்நாள் சாதனையாளர் விருது” பெறும் 5...

2026-01-18 19:11:24
news-image

அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு விடயங்களோ...

2026-01-18 19:15:36
news-image

கசிப்பு வியாபாரியை கைதுசெய்யச் சென்ற பொலிஸாரை...

2026-01-18 18:40:51
news-image

யாழில் போதைப்பொருளை விற்க முயன்ற இரு...

2026-01-18 18:26:42
news-image

மட்டக்களப்பில் ரயில் தண்டவாளத்துக்கு அருகில் மோட்டார்...

2026-01-18 18:19:28
news-image

2025 நவம்பருக்குள் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின்...

2026-01-18 17:58:32
news-image

நாட்டில் தொற்றா நோய்களை கட்டுப்படுத்தவும் தடுக்கவுமான...

2026-01-18 18:14:12
news-image

யாழில் கோர விபத்து - ஒருவர்...

2026-01-18 17:47:20
news-image

பல வருடங்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்...

2026-01-18 18:05:04
news-image

மக்கள் விடுதலை முன்னணியின் ஆரம்பகால உறுப்பினரான...

2026-01-18 16:52:59