சிட்டி லீக் யூசுப் கிண்ண இறுதிப் போட்டி : சோண்டர்ஸ் எதிர் கலம்போ எவ்.சி. இன்று

10 Mar, 2024 | 02:30 PM
image

(நெவில் அன்தனி)

இளம் கால்பந்தாட்ட வீரர்களின் ஆற்றல்களை வெளிக்கொண்டுவரும் நோக்கத்துடன் சிட்டி புட்போல் லீக் ஏற்பாடு செய்துள்ள 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான யூசுப் கிண்ண கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டி சிட்டி லீக் திடலில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் (3.30 மணி)நடைபெறவுள்ளது.

(வைப்பகப் படம்)

இந்த இறுதிப் போட்டியில் சோண்டர்ஸ் கழகமும் கலம்போ எவ்.சி.யும் ஒன்றையொன்று எதிர்த்தாடுகின்றன.

இந்த இரண்டு கழகங்களும் ஏ குழுவில் இடம்பெற்றதுடன் இரண்டு அணிகளுக்கும் இடையிலான லீக் போட்டி 1 - 1 என வெற்றிதோல்வியின்றி முடிவடைந்திருந்தது.

இக் குழுவில் இடம்பெற்ற 3ஆவது அணியான பிளக் ஸ்கொயாருடனான போட்டியை இந்த இரண்டு அணிகளும் வெற்றிதோல்வியின்றி முடித்துகொண்டிருந்தன.

கால் இறுதியில் யங் சில்வரை 2 - 1 என்ற கோல்கள் கணக்கிலும் அரை இறுதியில் ஜாவா லேனை 4 - 0 என்ற கோல்கள் கணக்கிலும் சோண்டர்ஸ் வெற்றிகொண்டிருந்தது.

கலம்போ எவ். சி.,  கால் இறுதியில் மாளிகாவத்தை யூத்தை 3 - 0 என்ற கோல்கள் கணக்கிலும் அரை இறுதியில் விக்டரியை 6 - 1 என்ற கோல்கள் கணக்கிலும் வெற்றிகொண்டிந்தது.

இந்த பெறுபேறுகளின் அடிப்படையில் டி.ஏ. ராஜபக்ஷ தலைமையிலான சோண்டர்ஸ் கழகத்துக்கும் எம்.எச்.எம். ஹபீல் தலைமையிலான கலம்போ எவ்.சி.க்கும் இடையிலான இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பை தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று சம்பியனாகும் அணிக்கு யூசுப் வெற்றிக் கிண்ணம், தங்கப் பதக்கங்கள், 150,000 ரூபா பணப்பரிசு என்பன வழங்கப்படும்.

இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு கிண்ணம், வெள்ளிப் பதக்கங்கள், 100,000 ரூபா பணப்பரிசு என்பன வழங்கப்படும்.

சிறந்த வீரர்களுக்கான விடேச விருதுகளும் வழங்கப்படும்.

அணிகள்

சோண்டர்ஸ்: டி.ஏ. ராஜபக்ச (தலைவர்), பி. கிஷோர், எம்.ஆர்.எம். அஷப், ஜே.எம். ரம்ஸான், டபிள்யூ.வி. நிமாஷ, ஏ.எஸ்.என். நிவன்த, பி.எஸ்.டி.டி. பண்டார, எம். ஷஹித், ஏ.எம்.எம். முர்ஷத், டபிள்யூ.எஸ்.என். அல்விஸ், டபிள்யூ.ஏ.பி. ப்ரபுஷித்த, என்.ஏ.என். அஹ்மத், எம்.இஸட். முபாஸ்ஸல், எம்.எப்.எச்.எம். பாதிஹ், எச்.ஏ.எம். ரியாஸ், எஸ்.யூ. விரங்க, எம். சாத், எம். சமீர், எம்.எஸ். கான், கே.எஸ். அநுராத, டி.எஸ்.யூ. லியனஆராச்சி, எம். ரஸ்லான், எம்.ஆர்.எம். கய்ப். பயிற்றுநர்: டிலான் கௌஷல்ய.

கலம்போ எவ்.சி.: எம்.எச்.எம். ஹபீல் (தலைவர்), மொஹமத் மனாப், எம்.எப்.எம். பாதில், ஜே.டபிள்யூ.எம்.ஆர். யொஹான், எம்.ரி. நிலார், எம். ஹம்தி, பவன் சச்சின், யூ. ஷக்கில், எம்.ஏ. அத்திப், எம். ஷக்கீல், எம்.என்.எம். ஹய்சாம், எம்.ஐ. யாசிர், மொஹமத் நஸார், எஸ். உமர், கே.ஜீ.எஸ் கஹட்டகஹாவத்த, ஏ.எச். அப்துல்லா, பி.இஸட். பிலால், ஜே.டபிள்யூ.எம். ஷ ஷிக்க சைமன், எம்.ஐ. இன்ஸான், எம்.ஆர்.எம். ருஸெய்க், ஏ. ஷான் கல்தேரா, ஏ.எஸ். திசாநாயக்க, எம். லூக்மன். பயிற்றுநர். எம். ஹசன் றூமி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பரிசுத் தொகை...

2024-09-18 16:51:08
news-image

நியூஸிலாந்துடனான முதலாவது டெஸ்ட்: முதலாம் நாள்...

2024-09-18 12:34:13
news-image

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி : இலங்கை...

2024-09-17 22:27:53
news-image

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியனஷிப் 2024:...

2024-09-14 13:12:09
news-image

சமூக ஊடகங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

2024-09-13 19:18:49
news-image

தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர்...

2024-09-12 21:54:30
news-image

தெற்காசிய கனிஷ்ட, தேசிய கனிஷ்ட சாதனைகளுடன்...

2024-09-12 15:41:14
news-image

ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண 2023...

2024-09-11 20:04:05
news-image

தென் ஆபிரிக்கா ஏ அணிக்கு எதிரான...

2024-09-11 20:17:03
news-image

எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64...

2024-09-11 18:04:26
news-image

செப்பக் டெக்ரோ உலக சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு...

2024-09-11 12:51:44
news-image

பாரிஸ் பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற சமித்த...

2024-09-11 12:45:41