எனது கோரிக்கையை ரணில் மாத்திரமே அச்சமின்றி ஏற்றுக்கொண்டார் : 'சதி' நூலில் கோட்டாபய

10 Mar, 2024 | 10:54 AM
image

(எம்.மனோசித்ரா)

பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு தன்னால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே அச்சமின்றி பொறுப்பேற்றதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுதிய 'சதி' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் பிரதமர் பதவியை ஏற்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அவர் நிராகரித்ததாகவும் அந்த புத்தகத்தின் 163ஆவது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவிடம் பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டபோது தன்னால் உடனடியாக பதவியை ஏற்க முடியாது என்றும், அது தொடர்பில் பகிரங்கமாக அறிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அந்த நூலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

'இந்த வன்முறைக்கு மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை என்ற கோரிக்கைக்கு அமைய பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரை நியமிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. எனவேதான் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமர் பதவியை ஏற்குமாறு கேட்டுக்கொண்டேன்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய முடியாது எனக் கூறி அவர் எனது கோரிக்கையை நிராகரித்தார். அதன் பின்னர் சரத் பொன்சேகாவுடன் பேசி பிரதமர் பதவியை ஏற்குமாறு கேட்டுக்கொண்டேன்.

அவர் தன்னை பிரதமராக நியமிப்பதை பகிரங்கமாக அறிவிக்குமாறும், அதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும் குறிப்பிட்டார். எனினும் அவருக்கு வழங்கப்பட்ட பதவியை அவர் உடனடியாக ஏற்கவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் அதிகாரி சம்பத் மானம்பேரி...

2026-09-12 16:16:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு...

2026-09-12 16:01:07
news-image

மத்தள விமான நிலையத்தில் மான் வேட்டை:...

2026-09-12 15:45:08
news-image

தெஹிவளை கைகுண்டுத் தாக்குதல்: இலக்கு மாறியதால்...

2026-09-12 15:38:43
news-image

வீடு புகுந்து திருட்டு மற்றும் குற்றச்...

2026-09-12 15:16:55
news-image

26 நகரங்களை அபிவிருத்தி செய்ய 65...

2026-09-12 14:49:30
news-image

நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு...

2026-09-12 15:13:56
news-image

தனமல்விலவில் 114 கிலோவிற்கும் அதிக கஞ்சாவுடன்...

2026-09-12 15:11:22
news-image

தனமல்வில வீதி விபத்து: நான்கு இளைஞர்கள்...

2026-09-12 14:48:44
news-image

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகனங்களின் ‘ஸ்மார்ட் சாவிகள்’...

2026-09-12 14:56:17
news-image

சட்டவிரோத மீன்பிடி: இலங்கை கடற்படையினரின் விசேட...

2026-09-12 14:48:21
news-image

அரசாங்கத்தின் செயல்கள் ,வாக்குறுதிகள் நிறைவேற்றாமையை கண்டித்து...

2026-09-12 14:50:18