(ஆர்.ராம்)
பரந்து பட்ட அரசியல் கூட்டணியை அமைப்பது குறித்து கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அடுத்து ஜனாதிபதி தேர்தலை முகங்கொடுக்கும் முகமாக பரந்துபட்ட கூட்டணியொன்றை ஸ்தாபிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆலோசனையில், ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க, புதிய கூட்டணியின் ஏற்பாட்டாளர் நிமல் லன்சா, மற்றும் சுதந்திரக்கட்சியின் மைதிரிபால சிறிசேன ஆகிய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தரப்பினருடன் இன்னமும் இறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை. எனினும் ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் நேர்மறையாக உள்ளன.
இதேவேளை, அடுத்துவரும் நாட்களில் ஐக்கிய தேசியக்கட்சி, பொதுஜனபெரமுன, மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய தரப்பினருடன் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
என்னைப்பொறுத்தவைரயில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க மீண்டும் ஜனதிபதி பதவிக்காக போட்டியிடுவதற்கு முன்வருவாராக இருந்தால் எமது கூட்டணி அவரை பொதுவேட்பாளராக ஏற்றுக்கொண்டு ஆதரிப்பதற்கு தயாராக உள்ளது.
தற்போதைய நிலையில் நாம் ரணில் விக்கிரமசிங்கவின் முடிவினை எதிர்பார்த்துள்ளோம்.
ஆகவே அவர் ஜனாதிபதி தேர்தலில் உத்தியோக பூர்வமாக போட்டியிடுவதாகவும் பொதுவேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் என்றும் அறிவிக்க வேண்டிய தீர்மானத்தினை எடுக்க வேண்டியவராக உள்ளார்.
அவரது முடிவுக்காக காத்திருக்கும் நாம், எமது பொது எதிரியான ஜே.வி.பியை தோற்கடிப்பதிலும் கரிசனைகளைக் கொண்டுள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM