அநுராதபுரம், ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூன்று ஆண்கள் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று சனிக்கிழமை (09) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இசை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிலர் மீது கெப் ரக வாகனத்தை வேகமாக ஓட்டி வந்த நபர் மோதித் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
விபத்தில் காயமடைந்த மூன்று ஆண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பெண்கள் தற்போது அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் 16, 19 மற்றும் 21 வயதுடைய ரம்பேவ மற்றும் பிஹிம்பியகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய கெப் வாகனத்தின் சாரதியை கைது செய்வதற்கான விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM